காமன்வெல்த் போட்டிகளில் மகளிருக்கான 48கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நீத்து அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். ஆடவருக்கான 51 கிலோ எடைப்பிரிவில் அமித் பங்கால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் நிகத் ஸரீன், 60 கிலோ எடைப்பிரிவில் ஜெயஸ்மீன் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற 48 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதி போட்டியில் கனடாவின் பிரியங்கா தில்லானை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் சுற்றில் இவர் அதிகமான புள்ளிகளை எடுத்தார்.
அதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் சிறபாஅன ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்தச் சுற்றிலும் புள்ளிகளை வென்றார். இதைத் தொடர்ந்து 3வது சுற்றில் கனடா வீராங்கனையை நாக் அவுட் செய்து வெற்றி பெற்றார்.அத்துடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இன்று நடைபெறும் ஆடவருக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் அரையிறுதியில் பங்கேற்க உள்ளார். அந்தப் போட்டியில் இவர் ஸாம்பியாவின் பேட்ரிகை எதிர்த்து விளையாட உள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இவரும் இறுதிப் போட்டிக்கு சென்றுவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு நடைபெறும் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிகத் ஸரீன் அரையிறுதியில் விளையாட உள்ளார். அவர் இங்கிலாந்து நாட்டின் சவானாவை எதிர்த்து விளையாடுகிறார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து மகளிருக்கான 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஜெயஸ்மீன் இங்கிலாந்து வீராங்கனை கெம்மா பேஜை எதிர்த்து விளையாட உள்ளார். இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்