பரபரப்பான கருத்தை தெரிவிப்பது வேறு. தெரிவிக்கும் கருத்து எல்லாமே பரபரப்பாக இருப்பது என்பது வேறு. இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் நடிகை கஸ்தூரி. பெரும்பாலும் அவரது கருத்துக்கள், சூடாகவே இருக்கும். சில நேரங்களில் அது ‛நச்’ என்று இருக்கும், பல நேரங்களில் ‛ப்ச்...’ என்று இருக்கும்.


அந்த வகையில் பெரியார் சிலைக்கு எதிராக கனல் கண்ணன் பேசிய பேச்சு, வழக்குப்பதிவு வரை சென்று, அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அதே விவகாரத்தில் ‛வாண்டடாக’ வந்திருக்கிறார் நடிகை கஸ்தூரி. 


‛‛Sincere qn. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். மசூதி முன்போ சர்ச் பக்கத்திலோ எங்கேனும் பெரியார் சிலையோ கடவுள் இல்லை என்ற வாசகமோ பார்த்ததுண்டா? அரசியல் தலைவர்களின் மாடமாளிகைகள், நிறுவனங்கள், பள்ளிகளில் உள்ளேயோ வெளியேயோ periyar சிலை உண்டா? கடவுள் சிலை பார்த்திருக்கிறேன்னா’’






என்று அவர் ஒரு பதிவைப் போட, அங்கே ஊரும், உலகமும் கூட கும்பியடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் சளைத்தவரா கஸ்தூரி, அனைத்துக்கும் அசராமல் பதிலளித்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும், ஒரு தரப்பு, எங்கெல்லாம் மும்மத தலங்களுக்கு முன் பெரியார் சிலை இருக்கிறதோ, அதையெல்லாம் போட்டோ எடுத்து கஸ்தூரிக்கு பதிலடி தரத் தொடங்கினர். 


 










இப்படி ஒரு தரப்பு கஸ்தூரியை தாக்கினாலும், மற்றொரு தரப்பு, கஸ்தூரிக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த பஞ்சாயத்து முடிவதற்குள் மற்றொரு பஞ்சாயத்திற்குள் நுழைந்தார் கஸ்தூரி. 


‛‛கோவிலுக்குள் செல்லும் உரிமையை பெற்று தந்தது பெரியார்தானே?... அதனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு கோவில் முன்பும் பெரியார் சிலை நிறுவப்பட வேண்டும்....’’






இப்படி, முதல்வர் ஸ்டாலினை டேக்செய்து ஒருவர் பதிவு போட,  அதற்கும் வழக்கம் போல வாண்டடாக சென்று ,பதிலளித்து அடுத்த சர்சையை துவங்கி வைத்தார் கஸ்தூரி, அந்த பதிவில், 


‛‛இது பெரி(ய)யார் உருட்டா இருக்கே! எந்த கோவிலுக்கு செல்லும் உரிமையை யாருக்கு வாங்கி கொடுத்தாரு இவெரா? உண்மையில் கோவில் நுழைவு வரலாறு என்ன என்று நம் மக்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும். திராவிட பொய்களை சொல்லி எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’’






 


என்று பதிவு செய்து மீண்டும் ட்விட்டரை பரபரப்பாக்கியிருக்கிறார் கஸ்தூரி. வழக்கம் போல, அதற்குள் நேர், எதிர்மறையான கமெண்ட்டுகள் கட்டி ஏறிக்கொண்டிருக்கிறது. இது எங்கு போய் முடியுமோ!