காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர். அந்தவகையில் இன்று ஆடவருக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் பங்கேற்றார். இவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார். இன்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் அமித் பங்கால் ஸ்காட்லாந்து வீரர் முல்லிகன் லென்னானை எதிர்த்து விளையாடினார். 


இந்தப் போட்டியில் முதல் சுற்றில் அமித் பங்கால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். அந்தச் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்று அசத்தினார். இரண்டாவது சுற்றிலும் அமித் பங்கால் சிறப்பாக தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக அவர் அதிக புள்ளிகளை பெற்றார். 


 






மூன்றாவது மற்றும் கடைசி சுற்றில் அவர் ஸ்காட்லாந்து வீரரின் முயற்சிகள் அனைத்தையும் லாவகமாக தடுத்தார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் இவர் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவிற்கு அமித் பங்கால் மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் நடப்பு காமன்வெல்த் தொடரில் குத்துச்சண்டையில் இந்தியாவிற்கு 4வது பதக்கம் உறுதியாகியுள்ளது. 


முன்னதாக நேற்று ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஹூசாமுதுதீன் காலிறுதியில் வெற்றி பெற்று முதல் பதக்கத்தை உறுதி செய்தார். அவரைத் தொடர்ந்து மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நீத்து அரையிறுதி சென்று பதக்கத்தை உறுதி செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிகத் ஸரீன் காலிறுதிச் சுற்றில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு 3வது பதக்கத்தை உறுதி செய்திருந்தார். இந்தச் சூழலில் தற்போது அமித் பங்கால் இந்தியாவிற்கு நான்காவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.


இன்று மாலை 6.15 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜெயஸ்மீன் காலிறுதிச் சுற்றுப் போட்டியில் விளையாட உள்ளார். அவரைத் தொடர்ந்து ஆடவர் 92+ கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சாகர் தன்னுடைய காலிறுதிச் சுற்றில் விளையாட உள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண