காமன்வெல்த் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்று அசத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென் இறுதிப் போட்டியில் அசத்தலாக விளையாடி தங்கம் வென்று இருந்தார். இதைத் தொடர்ந்து ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் சத்விக்-சிராக் இணை இங்கிலாந்து நாட்டின் லேன் வெண்டி ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இந்தப் போட்டியில் முதல் கேமில் இந்தியாவின் சத்விக்- சிராக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன்காரணமாக இந்த கேமை 21-15 என்ற கணக்கில் எளிதாக வென்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது கேமில் இங்கிலாந்து இணை சற்று சுதாரித்து கொண்டு தொடக்கம் முதலே அடுத்தடுத்து புள்ளிகளை குவித்து வந்தது. இதன்காரணமாக 11-10 என்ற கணக்கில் இந்தியாவின் சத்விக்-சிராக் ஜோடி முன்னிலை பெற்றது.
இறுதியில் இந்தியாவின் சத்விக்-சிராக் இணை வேகமாக புள்ளிகளை பெற்றது. இதன்காரணமாக இரண்டாவது கேமை 21-13 என்ற கணக்கில் வென்றது. அத்துடன் 21-15,21-13 என்ற கணக்கில் போட்டியை வென்று தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தியது.
முன்னதாக இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென் இறுதிப் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென் மலேசிய வீரர் யாங்கை எதிர்த்து விளையாடினார். இந்தப் போடியில் முதல் கேமில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் மலேசிய வீரர் யங் 21-19 என்ற கணக்கில் கேமை வென்றாஅர். அதபின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமை லக்ஷ்யா சென் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அந்த கேமை 21-9 என்ற கணக்கில் வென்று அசத்தினார். இதனால் இரு வீரர்களும் தலா ஒரு கேமை வென்று சமமாக இருந்தனர்.
போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது கேம் நடைபெற்றது. இந்த கேமில் லக்ஷ்யா சென் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த கேமை 21-16 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 19-21,21-9,21-16 என்ற கணக்கில் போட்டியை வென்றார். மேலும் காமன்வெல்த் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவிற்கு முதல் தங்கப்பத்தையும் லக்ஷ்யா சென் பெற்று தந்துள்ளார். நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு இது 20வது தங்கப்பதக்கம். இதன்மூலம் இந்திய அணி பதக்கப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியிருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்