சென்னையை அடுத்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரில் தொடக்கம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் நட்சத்திர வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது, அவர் கூறியதாவது, “ நமது அணி இருந்த பார்ம், நான் ஆடிய விதம் இதை எல்லாம் பார்த்தபோது நாங்கள் தங்கம்தான் எதிர்பார்த்தோம். சில அணிகள் நன்றாக விளையாடி வந்தனர். நேற்று எங்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், துரதிஷ்டவசமாக அமைந்துவிட்டது.




நான் தொடர் முழுவதும் நன்றாக விளையாடி வந்தேன். ஆனால், ஒரு நகர்த்தலின் பலவீனம் ஆட்டத்தை மாற்றிவிட்டது. இதனால், தங்கம் கைவிட்டு சென்றது. இருப்பினும், செஸ் ஒலிம்பியாடில் வெண்கலம் சாதாரண விஷயம் இல்லை.


எனது பயிற்சியாளர் எனக்கு அற்புதமான ஒத்துழைப்பு அளித்தார். நான் அவரிடம் 5 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறேன். எனது பயிற்சியாளர் எனது ஆட்டத்திறமையையும், என்னுடைய அறிவுத்திறனையும் மேம்படுத்தியுள்ளார்.




தொடரில் எப்படி செயல்பட வேண்டும், தொடரை எவ்வாறு உளவியல் ரீதியாக அணுக வேண்டும் என்று பல முறை நாங்கள் பேசியுள்ளோம். அவர் என்னுடைய மன வலிமையை அதிகரித்துள்ளார். இவரைவிட சிறந்த பயிற்சியாளரை என்னால் கண்டுபிடிக்க முடியாது.


என்னுடைய அடுத்த இலக்கு தற்போதுள்ள பார்முடன் தொடர்வது ஆகும். கடந்த சில மாதங்களாகவே நான் சிறப்பாகவே ஆடியதாக கருதுகிறேன். சில ஆட்டங்களில் வென்றுள்ளேன். ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு விளையாடுகிறேன். துல்லியத் தன்மை அதிகரித்துள்ளது. இதனால், இதைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்பதும், தற்போதுள்ள பார்மை இழந்துவிடக்கூடாது என்பதுமே எனது இலக்கு.”


இவ்வாறு அவர் கூறினார்.


இந்திய வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் தொடங்கியது முதலே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இருப்பினும், இறுதிநேரத்தில் துரதிஷ்டவசமாக இந்திய வீரர்கள் தடுமாறியதால் இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்லும் சூழல் ஏற்பட்டது. செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப்பதக்கத்தை உக்ரைன் அணியும், ஜார்ஜியா அணி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளனர்.


நடப்பு செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய பி அணியில் இடம்பெற்றிருந்த குகேஷ் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாடில் இரட்டை வெண்கலம் வென்ற இந்திய அணிகள்..!


மேலும் படிக்க : Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.. தல தோனி பங்கேற்கவில்லையா? என்னென்ன சிறப்பம்சங்கள் ?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண