செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் ஆடவர் பிரிவில் 3 அணிகளும், மகளிர் பிரிவில் 3 அணிகளும் களமிறங்கியுள்ளன. இந்த மூன்று அணிகளும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகின்றன. இந்நிலையில் இன்று 6வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 


இதில் இந்திய பி அணியில் களமிறங்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் அர்மேனியாவைச் சேர்ந்த சர்கிசன் கேப்ரியலை வீழ்த்தியுள்ளார். மூன்று முறை செஸ் ஒலிம்பியாட் பட்டத்தை வென்ற அர்மேனிய வீரரை டி.குகேஷ் தோற்கடித்து அசத்தியுள்ளர். அத்துடன் நடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடரில் இவர் தொடர்ச்சியாக தன்னுடைய 6வது வெற்றியை பதிவு செய்துள்ளார். 


 






அர்மேனிய வீரரை குகேஷ் 41வது நகர்த்தலில் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் அர்மேனியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 1.5-0.5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா பி பிரிவில் களமிறங்கிய நிஹால் சரின் தன்னுடைய போட்டியை டிரா செய்தார். அந்த அணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு இந்திய வீரரான ரோனக் சத்வானி வலுவான நிலையில் உள்ளார். ஆகவே இந்தப் போட்டியில் அர்மேனியா அணியை இந்திய அணி எளிதாக வீழ்த்தும் என்று கருதப்படுகிறது.


இந்தியா ஏ அணி உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. அதில் ஹரிகிருஷ்ணா தன்னுடைய போட்டியை 34வது நகர்த்தலில் வென்றுள்ளார். அந்த அணியில் இந்திய வீரர் அர்ஜூன் டிரா செய்துள்ளார். இந்திய ஏ அணி 1.5 புள்ளிகளையும் உஸ்பெகிஸ்தான் அணி 0.5 புள்ளிகளையும் பெற்றுள்ளன.


மகளிர் ஒலிம்பியாட் பிரிவில் இந்தியா ஏ அணி ஜார்ஜியா அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. கோனேரு ஹம்பி மற்றும் வைஷாலி ஆகிய இருவரும் தங்களுடைய போட்டியை வென்றனர். ஹரிகா மற்றும் தானியா தங்களுடைய போட்டியை டிரா செய்தனர். இதனால் இந்திய அணி ஜார்ஜியாவை வீழ்த்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண