Chess Olympiad 2022: 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பியானோ கலைஞர் ஒருவர் பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே பாடலை அந்தரத்தில் பறந்துகொண்டே வாசித்து பிரம்மிப்பூட்டியுள்ளார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா தற்போது நேரு ஸ்டேடியத்தின் உள்ளரங்கில் நடந்து வருகிறது. இதில் தமிழக முதல்வர் நேரு ஸ்டேடியத்திற்கு வரும்போது இசைக்கப்பட்ட “ஆளப் போறான் தமிழன்” பாடல் அனைவரையும் ஆரவாரத்தில் ஆழ்த்தியது. நிறைவு விழாவில் தமிழர்களின் இசை, நடனத்துடன், வெளிநாட்டு இசைகளும் இசைக்கப்பட்டு வருகின்றன. இதில், மகாகவி பாரதியாரின் பாடலான சின்னஞ்சிறு கிளியே பாடலை பியானோ இசைக் கலைஞர் ஒருவர் அந்தரத்தில் பறந்து கொண்டே இசைத்து பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.