இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை நடைபெற உள்ள தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். அதன்பின்னர் அவர் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக அமைக்கப்பட்ட அரங்கில் சில நேரம் செஸ் விளையாடி மகிழ்ந்தார். மேலும் விளையாட்டு போட்டிகள் தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
செஸ் ஒலிம்பியாட்டி இந்திய அணி:
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆடவர் பிரிவில் 3 அணிகளும் மகளிர் பிரிவில் 2 அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஆடவர் அணி:
டீம் ஏ: விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா, அர்ஜூன் எரிகியாசி, நாராயணன், சசிகிரண்.
டீம் பி: அதிபன், பிரக்ஞானந்தா,நிஹல் சரின், குகேஷ்,ரௌனக் சத்வானி
டீம் சி: சூர்ய சேகர் கங்குலி, கார்த்திகேயன் முரளி, சேதுராமன், அபிஜித் குப்தா
மகளிர் அணி:
டீம் ஏ: கோனேரு ஹம்பி, ஹரிகா திரோனாவள்ளி, ஆர் வைஷாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி
டீம் பி: வந்திகா அகர்வால், சௌமியா சாமிநாதன், மேரி கோம்ஸ், பத்மினி ரௌத், திவ்யா தேஷ்முக்
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் முறை?
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கிளாசிக்கல் முறையில் போட்டிகள் நடைபெறும். இந்த முறையில் முதல் 40 நகர்த்தல்களை 90 நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும். அதன்பின்னர் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்படும். இந்தப் போட்டியில் எப்போது வேண்டுமென்றாலும் வீரர்கள் டிரா செய்யலாம். மொத்தம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 12 சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் அனைத்தும் தினமும் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகின்றன.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை எப்படி நேரலையில் காண்பது?
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை டிடி தொலைக்காட்சியில் நேரடியாக காண முடியும். இவை தவிர செஸ்பேஷ் இந்தியா யூடியூப் செனல் மற்றும் எஃப்ஐடிஇ யூடியூப் செனல் ஆகியவற்றில் நேரலையாக காண முடியும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்