சிங்கப்பூருக்கு கடிதம்:


இலங்கையில் யுத்த காலத்தின் போது நடைபெற்ற போர் குற்றங்களுக்காக கோத்தபய ராஜபக்ச கைது செய்யப்பட வேண்டுமென, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிங்கப்பூர் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.


முதலில் கோத்தபயவின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய வேண்டுமெனவும், அவர் மீதான போர்க்கால குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிங்கப்பூர் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில்  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


பிரித்தானிய கன்சவேர்ட்டிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான எலியட் கோல்பர்ன் தலைமையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. போர் குற்றம் தொடர்பாக கோத்தபய ராஜபக்ச மீதான உடனடி விசாரணை தேவை என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஜெனிவா ஒப்பந்தத்தின்படி கடுமையான குற்றங்களுக்கு உலகளாவிய அதிகார வரம்பை பயன்படுத்த, சிங்கப்பூருக்கு விருப்பம் உள்ளது என தெரியவருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


சாட்சிகள் உள்ளனர்:


இலங்கையில் நடைபெற்ற போர்க்காலங்களில் கோத்தபய ராஜபக்சவின் வன்முறை செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட ஏராளமான சாட்சிகள் இங்கிலாந்தில் வசிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். விசாரணையின் போது இங்கிலாந்தில் உள்ள சாட்சிகள் ஒத்துழைப்பார்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் அரசு விசாரணையை முன்னெடுக்கும் பட்சத்தில் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முடியும் என இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.



Also Read: Sri Lanka fuel shortage: தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு; இந்தியாவிடம் உதவி கேட்கும் இலங்கை..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண