செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இதற்கான இறுதி கட்ட பணிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. அத்துடன் இதில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளை வரவேற்று அவர்கள் வேண்டிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 


 


இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரின் அட்டவணை என்ன? அதில் விளையாடப்படும் போட்டிகளின் முறை என்ன? அதை எங்கே நேரலையில் பார்க்கலாம்?


 


செஸ் ஒலிம்பியாட்டி இந்திய அணி:


சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆடவர் பிரிவில் 3 அணிகளும் மகளிர் பிரிவில் 2 அணிகளும் இடம்பெற்றுள்ளன. 


 


ஆடவர் அணி:


டீம் ஏ: விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா, அர்ஜூன் எரிகியாசி, நாராயணன், சசிகிரண்.


டீம் பி: அதிபன், பிரக்ஞானந்தா,நிஹல் சரின், குகேஷ்,ரௌனக் சத்வானி


டீம் சி: சூர்ய சேகர் கங்குலி, கார்த்திகேயன் முரளி, சேதுராமன், அபிஜித் குப்தா


 


மகளிர் அணி: 


டீம் ஏ: கோனேரு ஹம்பி, ஹரிகா திரோனாவள்ளி, ஆர் வைஷாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி


டீம் பி: வந்திகா அகர்வால், சௌமியா சாமிநாதன், மேரி கோம்ஸ், பத்மினி ரௌத், திவ்யா தேஷ்முக் 


 


செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் முறை?


செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கிளாசிக்கல் முறையில் போட்டிகள் நடைபெறும். இந்த முறையில் முதல் 40 நகர்த்தல்களை 90 நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும். அதன்பின்னர் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்படும். இந்தப் போட்டியில் எப்போது வேண்டுமென்றாலும் வீரர்கள் டிரா செய்யலாம். மொத்தம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 12 சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் அனைத்தும் தினமும் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகின்றன.


 


செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை எப்படி நேரலையில் காண்பது?


செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை டிடி தொலைக்காட்சியில் நேரடியாக காண முடியும். இவை தவிர செஸ்பேஷ் இந்தியா யூடியூப் செனல் மற்றும் எஃப்ஐடிஇ யூடியூப் செனல் ஆகியவற்றில் நேரலையாக காண முடியும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண