ஞாயிற்றுக்கிழமை கோபன்ஹேகனில் நடந்த இறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியனான கரோலினா மரினை 21-12, 21-10 என்ற கணக்கில் தோற்கடித்து, BWF உலக சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற தென் கொரியாவின் முதல் பெண்மணி என்ற பெருமையை உலகின் முதல்நிலை வீராங்கனையான அன் சே-யங் பெற்றார்.


21 வயதான முதல் நிலை வீரரான அன் சே-யங்,  இந்த தங்கப் பதக்கத்தை பெறுவதற்கான இந்த தொடர் முழுவதும் இரண்டு ஒலிம்பிக் சாம்பியன்களை வீழ்த்தி, இறுதியில் மிகவும் சவாலான போட்டிக்குப் பின்னர் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். சனிக்கிழமை நடந்த அரையிறுதிப் போட்டியில் டோக்கியோவில் தங்கப் பதக்கம் வென்ற சென் யூ ஃபேயை நேர் கேம்களில் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 





இன்றைய போட்டியில் அதாவது ஆகஸ்ட் 27ஆம் தேதி வெற்றி பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் விளையாடி மகிழ்ந்தேன்,” என்று தனது தங்கப் பதக்கத்தைப் பெற்ற பிறகு அன் சே-யங் கூறினார்.




2016 ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் மரின், முன்புற தசைநார் (ACL) காயத்திற்குப் பிறகு மீண்டு வரும் பாதையில் இருக்கிறார், அவர் தனது நான்காவது உலக பட்டத்தை வெல்ல செய்த முயற்சிகள் போதுமானதாக இல்லை. 


போட்டியின் இரண்டாவது சுற்றில்  10-10 என சமநிலையான பிறகு, போட்டியின் இறுதிப்போட்டியில் மரினிடம் முதல் தோல்வியை சந்தித்தார். 




30 ஆண்டுகளில் தென் கொரியாவின் முதல் பெண்கள் இறுதிப் போட்டியாளர் அன் சே-யங். இதற்கு முன்னர் பேங் சூ-ஹியூன் 1993 இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவின் சுசி சுசாந்தியிடம் தோற்றார். அதன் பின்னர் ஒரு தென் கொரியா அணி வீராங்கனை யாருமே இறுதிப் போட்டி வரை முன்னேறவில்லை.