2021 ஐபிஎல் கிரிக்கெட் டி20 தொடர் சென்னையில் வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 10ஆம் தேதி இந்தப்போட்டி நடைபெற உள்ளது. 


இதனிடையே, மும்பை வான்கடே மைதானத்தில் பணியாற்றும் 8 பேர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி ஒருவர், டெல்லி அணியின் அக்‌ஷர் பட்டேல், பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.




மேலும், இந்தத் தொடரின் முதல் சில லீக் போட்டிகள் நடைபெற உள்ள மும்பையில், கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறினார்.


 


முன்னதாக, ஐபிஎல் தொடர் நடைபெறும் மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.