வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது.  இதில் முதல் மூன்று போட்டிகளை வென்ற வங்கதேச அணி, தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், நான்காவது டி-20 போட்டியை வென்று ஆறுதல் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு, கடைசி டி-20 போட்டியையும் இழந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. 


இந்த தொடர் முழுவதுமே, வங்கேச அணி செட் செய்த டார்கெட் குறைவான ரன்களையே கொண்டிருந்தது. ஆனால், அதையும் சேஸ் செய்ய முடியாமல் திணறிய ஆஸ்திரேலிய அணி, கடைசி போட்டியில் ஒரேடியாக 123 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் 62 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியது. 2005-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 79 ரன்களுக்கு ஆல்-அவுட்டானதே ஆஸ்திரேலியாவின் மோசமான ரெக்கார்டாக இருந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இந்த ரெக்கார்டு மேலும் மோசமாகியுள்ளது. 


Womens Hockey Olympics | தள்ளுவண்டி, வறுமை, ஒடுக்குமுறை.. ஒலிம்பிக்ஸ் ஹாக்கியில் சாதித்த 8 இந்திய பெண்களின் கதைகள்..!


கடைசி டி-20 போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்த ஷகிப்-அல்-ஹசன், சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் வங்கதேச அணி வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்த தொடரில் வெற்றி பெற்றதன் மூலம், வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் தொடர், முதல் டி-20 தொடரில் வெற்றி கண்டுள்ளது. அது மட்டுமின்றி, சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் குறைந்தபட்ச ஸ்கோரை ஆஸ்திரேலியாவை சேஸ் செய்யவிடாமல் தடுத்துள்ளது. மேலும், சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்துள்ள கடைசி 9 டி-20 போட்டிகள், 8-ல் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. 






டி-20 உலகக்கோப்பை நடக்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகளுக்கு எதிராக விளையாடிய கடைசி 5 டி-20 தொடர்களையும் ஆஸ்திரேலியா அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 7ஆவது டி20  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் நடைபெற இருந்த டி-20 உலகக்கோப்பை தொடர் இப்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.


OTT Releases August 2021: நயன்தாராவின் நெற்றிக்கண், விஷ்ணுவர்தனின் பாலிவுட் எண்ட்ரி... இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்!


அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் டி-20 ஃபார்ம் மோசமாக உள்ளது. டி-20 உலகக்கோப்பை தொடங்குவதற்குள் ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஃபார்முக்கு வந்தால் மட்டுமே மற்ற நாடுகளுக்கு டஃப் கொடுக்க முடியும்.