இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.


நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்தத் திரைப்படத்தில் இருக்கும் ஹலமதி ஹபி போ பாடல் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்தப் பாடலுக்கு பிரபலங்கள் பலரும் நடனமாடி வருகின்றனர். 


இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்தப் பதிவில் அவர் ஹலமதி ஹபி போ பாடலுக்கு நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


 






இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் லைக் செய்து பகிர்ந்து வருகின்றனர். ஹலமதி ஹபி போ பாடல் யூடியூபில் வெளியான உடன் 323 மில்லியன் பேர் பார்த்து ரசித்தனர். அத்துடன் ஸ்பாட்டிஃபையில் இந்தியாவின் டாப் 50 பாடல்கள் பட்டியலில் இந்தப் பாடல் இடம்பெற்று சாதனைப் படைத்திருந்தது. தற்போது அந்தப் பாடலுக்கு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நடனமாடி உள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண