இந்திய பேட்மிண்டனின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தற்போது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ளார். அவர் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் சீனா வீராங்கனை ஹே பிங்க் ஜியோவை எதிர்த்து விளையாடினார். இந்தத் தொடரில் நான்காம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து 3ஆவது நிலை வீராங்கனையான பிங்கை எதிர்கொண்டதால் இந்தப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.


இந்தப் போட்டியில் முதல் கேமில் ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-9 என்ற கணக்கில் எளிதாக வென்றார். அதன்பின்னர் இரண்டாவது கேமில் சுதாரித்து கொண்டு ஆடிய பிங்க் 21-13 என அந்தக் கேமை கைப்பற்றினார். இதன்காரணமாக ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது கேம் நடைபெற்றது. அதில் தொடக்கம் முதல் சிந்து மற்றும் பிங்க் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்து வந்தனர்.






ஒரு மணி நேரம் மற்றும் 16 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியை பி.வி.சிந்து 21-9,13-21,21-19 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் அவர் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார். நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் பி.வி.சிந்து  ஜப்பான் வீராங்கனை அகேன் யமாகுச்சியை எதிர்த்து விளையாட உள்ளார். இந்த இருவருக்கும் இடையே நடைபெற்றுள்ள 21 போட்டிகளில் பி.வி.சிந்து 13 முறை வென்றுள்ளார். ஆகவே நாளை நடைபெறும் அரையிறுதி போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் இன்று நடைபெறும் மற்ற போட்டிகளில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்-சிராக் இணை மலேசியாவின் ஆரோன் -சூவிக் இணையை எதிர்த்து விளையாடுகிறது. அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் சீன வீரர் வெங் ஹோங் யங்கை எதிர்த்து விளையாட உள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண