டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் வென்று அவானி லெகாரா அசத்தியிருந்தார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு இவர் பாரா துப்பாக்கி உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்று உள்ளார். நேற்று நடைபெற்ற ஆர் 2 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இவர் பங்கேற்றார். அதில் சிறப்பாக செயல்பட்ட அவானி லெகாரா தங்கப்பதக்கத்தை வென்றார். 


 


சாதனையை முறியடித்து சாதித்த லெகாரா:


 


அத்துடன் இந்தப் பிரிவில் 250.6 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்தார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் அவர் படைத்திருந்த 249.6 என்ற உலக சாதனையை மீண்டும் முறியடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும் பாரா உலகக் கோப்பையில் தங்கம் வென்றதன் மூலம் பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்கான தகுதியையும் அவர் பெற்றார். இதன்மூலம் 2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 


 






20 வயதாகும் அவானி லெகாராவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சக வீரர் வீராங்கனைகளும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


 


அவானி கடந்து வந்த பாதை: 


ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் அவானி லெகாரா. 2012-ம் ஆண்டு, தன்னுடைய 11 வயதில் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தால், அவானிக்கு முதுகு தண்டு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், மீண்டு எழுந்த அவர் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டிகளில் கவனம் செலுத்தினார். பீய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவை முன்மாதிரியாக கொண்ட அவானி, துப்பாக்கிச் சுடுதலில் முழுமையாக கவனல் செலுத்த தொடங்கினார். 2017-ம் ஆண்டு சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று தடம் பதித்தார். தற்போது, ரேங்கிங்கில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் அவர், எதாவது ஒரு பதக்கம் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதை இப்போது உறுதி செய்துள்ளார்.


 






ஓடியாட வேண்டிய வயதில் ஏற்பட்ட விபத்தால் துவண்டுபோகவில்லை அவானி. மீண்டு வந்தார், படிப்பிலும் விளையாட்டிலும் இரண்டிலும் கவனம் செலுத்தினார். ஒரு புறம் விளையாட்டில் சர்வதேச ஃபோடியம்களை ஏறி வரும் அவானி, மற்றொரு புறம் சட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு. மீண்டு எழுந்தவர், சரித்தரம் படைத்துள்ளார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண