Asian Para Games: ஆசிய பாரா விளையாட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியா, பதக்கப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது. 


ஆசிய பாரா விளையாட்டுகள்:


நான்காவது ஆசிய பாரா விளையாட்டுகள் சினாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கியுள்ளது.  வரும் 28ம் தேதி வரையில் 22 விளையாட்டுகளில் 24 பிரிவுகளில் 566 தங்கப் பதக்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதற்காக இந்தியா சார்பில் 196 ஆண்கள் மற்றும் 113 பெண்கள்  என 309 தடகள வீரர், விராங்கனைகள் சீனா சென்றுள்ளனர். இவர்கள் 17 பிரிவுகளில் களமிறங்க உள்ளனர். இரண்டாவது நாள்  முடிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் 9 தங்கம், 12 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என மொத்தம் 34 பதக்கங்களை வென்றது.






மூன்றாவது நாளிலும் பதக்க வேட்டை:


இந்நிலையில் மூன்றாவது நாள் போட்டிகள் தொடங்கியதில் இருந்தே இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை வென்று வருகின்றனர். ஈட்டி எறிதல் உள்ளிட்ட பிரிவுகளில் காலையில் இருந்து இரண்டு தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.



  • ஈட்டி எறிதலில் F64 பிரிவில் இந்திய வீரர்களான சுமித் அண்டில் 73.29 மீட்டர் எறிந்து தங்கப்பதக்கமும், புஷ்பேந்திர சிங் 62.06 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினர். 

  • மகளிருக்கான டெபிள் டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவில் இந்திய வீராங்கனை, பவினா படேல் வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார். 

  • பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் இந்தியாவை சேர்ந்த மணிஷா மற்றும் பிரமோத் ஜோடி, வெண்கலம் வென்று அசத்தியது

  • 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் T-37 பிரிவில் பந்தய தூரத்தை 25.26 நொடிகளில் கடந்து, வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் ஸ்ரேயான்ஷ் திரிவேதி

  • பேட்மிண்டனில் கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் இந்தியாவை சேர்ந்த துளசிமதி மற்றும் நிதேஷ் ஜோடி, வெண்கலம் வென்று அசத்தியுள்ளது

  • ஈட்டி எறிதலில் F 37 பிரிவில் இந்திய வீரர் ஹனே 55.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தங்கம் வென்று அசத்தியுள்ளார்

  • வில் வித்தை ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்களான ஹர்விந்தர் சிங் மற்றும் சஹில் ஜோடி வெண்கலம் வென்று அசத்தியுள்ளது

  • ஆடவர்களுக்கான டேபிள் டென்னிஸ் கிளாஸ் 1 பிரிவில் இந்திய வீரர் சந்திப் டங்கி வெண்கலப் பதக்கம் வென்றார்






எகிறும் எண்ணிக்கை:


இதன் மூலம் இந்தியா தற்போது வரை 11 தங்கம், 12 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளது. இததொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் நடைபெற உள்ள போட்டிகளிலும், இந்திய விரர் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய சாதனை படைக்குமா இந்தியா?


2018 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா 190 விளையாட்டு வீரர்களை அனுப்பியது. அப்போது 15 தங்கம் உட்பட 72 பதக்கங்களை வென்றதே, இதுநாள் வரை சாதனையாக உள்ளது. இந்நிலையில் நடப்பு ஆசிய பாரா விளையாட்டிற்கு 309 வீரர், விராங்கனைகளை அனுப்பியுள்ள இந்தியா புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.