19 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கி, சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. 


இந்திய அளவில் இதுவரை இல்லாத எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் ஆசிய போட்டிகளில் பங்கேற்று விளையாடி பதக்கங்களை குவித்த வண்ணம் இருக்கின்றனர். முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய சார்பில் மொத்தம் 625 வீரர்கள் பங்கேற்று விளையாடினார்கள்.


ஆனால் தற்போது நடைபெற்று வரும் இந்த 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சுமார் 634 இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.


பதக்க வேட்டையில் இந்திய அணி


இந்த தொடரில் இந்திய அணி இதுவரை 16 தங்கம், 27 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தமாக 74 பதக்கங்களை வென்றிருக்கிறது. இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா புதிய இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.  


மேலும் , பதக்க பட்டியலில் சீனா, ஜப்பான், தென் கொரியாவிற்கு அடுத்த படியாக இந்தியா நான்காவது இடத்தை பெற்றுள்ளது.


வரலாற்று சாதனை


இச்சூழலில்,  13 ஆண்டுகளுக்குப் பிறகு  இந்தியா ஒரு வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. அதன்படி, 87 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுனில் குமார் 2-1 என்ற கணக்கில் கிரிகிஸ்தான் வீரர் அசிஸ்பெகோவை வீழ்த்தி  வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.


முன்னதாக, காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், சீனாவின் பெங் ஃபீயை 4-3 என்ற கணக்கில் வென்றார்.  மேலும், காலிறுதியில் தஜிகிஸ்தானின் சுக்ரோப் அப்துல்கேவை 9-1 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.


 அதேபோல் இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீரரான நீரஜ் கிரீகோ ஆடவர் 67 கிலோ பிரிவில் உஸ்பெகிஸ்தானின் மம்குத் பஷிலோவ்விடம் 3-5 என்ர கணக்கில்  தோல்வியடைந்தார்.  


அதேபோல் 60 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் கியானேந்தர் 6-1 என்ற கணல்லில் ஈரானி மெய்சம் டல்கானியிடம் தோல்வியடைந்தார். மற்றொரு இந்திய மல்யுத்த வீரரான விகாஸ், 77 கிலோ பிரிவில் காலிறுதியில் சீனாவின் ரூய் லியுவிடம் 1-9 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார்.


இச்சூழலில், இந்திய மல்யுத்த வீரர் சுனில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது இந்திய ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ரசிகர்கள் பலரும் சுனில் குமாருக்கு சமூக வலைதளப்பக்கங்கள் மூலம் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.


மேலும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பதக்கம் வென்ற சுனில் குமாருக்கு தன்னுடைய வாழ்த்துகளை எக்ஸ் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.


இது  தொடர்பாக அவர் இன்று (அக்டோபர் 4) வெளியிட்டுள்ள பதிவில், ” 87 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற சுனில் குமாருக்கு வாழ்த்துகள். கடந்த 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு நம் பெற்றிருக்கும் பதக்க  இது” என்று கூறியுள்ளார். 



2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மல்யுத்த அணி வீரர்கள்:


பெண்கள்:


பூஜா கெஹ்லாட் ( 50 கிலோ)


ஆன்டிம் பங்கால் (53 கிலோ) 


மான்சி அஹ்லாவத் (57 கிலோ)


சோனம் மாலிக் (62 கிலோ) 


ராதிகா (68 கிலோ)


கிரண் (76 கிலோ)


Greco- roman : ஆண்கள்


கியோனேந்தர் (60 கிலோ)


நீரஜ் (67 கிலோ)


விகாஸ் (77 கிலோ)


சுனில் குமார் (87 கிலோ)


நரீர்ந்தர் சீமா (97 கிலோ)


நவீன் (130 கிலோ) 


Mens freestyle:


யஸ் ( 74 கிலோ)


தீபக் புனியா (86 கிலோ)


விக்கி ( 97 கிலோ)


சுமித் (125 கிலோ)