ஆசிய போட்டி அரையிறுதியில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் விளாசிய திலக் வர்மா, அதனை தனது அம்மாவிற்கு அர்பணித்து இடுப்பில் குத்தியிருக்கும் டாட்டூவை காட்டி கொண்டாடிய வீடியோ ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
இளம் நட்சத்திரம்:
ஆந்திராவைச் சேர்ந்த திலக் வர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் அறிமுகமானவர்.
அந்த போட்டியில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியவர். அடுத்ததாக ஆசிய கோப்பை ஒரு நாள் தொடரிலும் இந்திய அணிக்காக விளையாடினார். இடதுகை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான திலக் வர்மா பந்து வீச்சிலும் இந்திய அணியின் முக்கியமான இளம் வீரர்களில் ஒருவராக இருக்கிறார்.
இச்சூழலில், இன்று (அக்டோபர் 6) வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி விளையாடியது. இதில் முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 96 ரன்கள் எடுத்தது.
அதில், 2 ஓவர்கள் வீசிய திலக் வர்மா 5 ரன்கள் மட்டுமே கொடுத்து தன் பங்கிற்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். பின்னர், களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஜெய்ஸ்வால் டக் அவுட்டகி வெளியேற, மறுபுறம் நின்ற ருதுராஜ் கெய்க்வாட் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார்.
அதில், இரண்டு பந்துகள் பொறுமையாக ஆடிய திலக் வர்மா, மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டார். பின்னர், அடுத்தடுத்த ஓவர்களில் தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தினார். இதனிடையே இந்த ஜோடி 18 பந்துகளில் 50 ரன்களை கடந்தது.
அரைசதம் விளாசிய திலக் வர்மா:
இச்சூழலில், வங்கதேச அணியினரின் பந்து வீச்சை சிக்ஸருக்கு பறக்கவிட்ட திலக் வர்மா, 25 பந்துகளில் அரைசதம் (55) அடித்தார். அந்த அரைசதத்தை தனது அம்மாவிற்கு அர்பணித்தார்.
டாட்டூவில் தயின் முகம்:
அதன்படி, தனது இடுப்பு பகுதியில் டாட்டூவாக அவர் போட்டிருக்கும் தனது தாயின் முகத்தை ஜெர்சியை விலக்கி காட்டினார். அப்போதை ரசிகர்கள் உற்சாகம் அடைந்து தங்களது மகிழ்ச்சியை தெரியபடுத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடயை திலக் வர்மா இது பற்றி பேசுகையில், ”அந்த கொண்டாட்டம் எனது அம்மாவிற்காக தான்.கடந்த சில போட்டிகளில் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதேபோல் இந்த அரைசத்தை எனது சமைராவிற்கு (ரோகித் சர்மாவின் மகள்) அர்பணிக்கிறேன்.
மேலும், ஒரு பந்துவீச்சாளராக இன்னும் முன்னேற்றமடைய விரும்புகிறேன். ஆல்ரவுண்டராக விளையாடுவதையே இலக்காக வைத்துள்ளேன். பந்துவீச்சில் முன்னேற்றமடைய அஸ்வின், ஜடேஜா உள்ளிட்டோரிடம் பயிற்சி பெற்று வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Pak vs Ned LIVE Score: 287 ரன்களை நோக்கி களம்.. இமாலய இலக்கை எட்டி பாகிஸ்தானை துவம்சம் செய்யுமா நெதர்லாந்து
மேலும் படிக்க: Asian Games 2023: அபாரம்! ஆசிய கோப்பை ஹாக்கியில் தங்கம்.. ஜப்பானை துவம்சம் செய்த இந்தியா!