வில்வித்தை விளையாட்டின் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் நம்பர் 2 இடத்தில் இருக்கும் இந்தியாவின் தீபிகா குமாரி, 2010-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு தகுதி பெறாமல் ஏமாற்றம் அளித்திருக்கிறார். 


27 வயதான தீபிகா, கடந்த 2010-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதை அடுத்து 2014, 2018-ம் ஆண்டுகள் நடைபெற்ற தொடர்களில் பங்கேற்று பதக்கம் வென்றார். உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அசத்தி வந்த தீபிகா குமாரிக்கு, ஒலிம்பிக் பதக்கம் மட்டும் இன்னும் எட்டாத கனியாகவே இருந்து வருகிறது. 






அதே போல, தீபிகாவின் கணவரான வில்வித்தை வீரர் அதானு தாஸூம் ஆசிய விளையாட்டுக்கு தேர்ச்சி பெறாமல் ஏமாற்றி இருக்கிறார். கடந்த ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியாவில் இருந்து  முதல் வில்வித்தை ஜோடியாக தீபிகா மற்றும் அதானு தாஸ் கலந்து கொண்டனர். பதக்கம் வெல்லாத அவர்கள், தொடர்ந்து இறங்கு முகத்தை சந்தித்து வருகின்றனர். எனினும் அடுத்து நடைபெறும் தொடர்களில் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ஆசிய விளையாட்டுக்கு தேர்வு பெற்றிருக்கும் இந்திய வீரர், வீராங்கனைகள்:






ஆண்கள் ரிகர்வ்: தருண்தீப் ராய், ஜெயந்தா தாலுக்தார், நீர்ஜா சவுகான் மற்றும் சச்சின் குப்தா.
பெண்கள் ரிகர்வ்: ரிதி போர், கோமலிகா பாரி, அங்கிதா பகத் மற்றும் சிம்ரன்ஜீத் கவுர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண