புதிய வருமான வரி சட்டத்தை கொண்டுவரவேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் பேசியுள்ளார்.
இது குறித்து மாநிலங்கவையில் பேசிய ப. சிதம்பரம், “புதிய வருமான வரி சட்டத்தை கொண்டுவரவேண்டும். திருத்தம் மேல் திருத்தம் என வருமான வரிச் சட்டம் குழப்பத்தை விளைவிக்க கூடியதாக உள்ளது. தொண்டு நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் முறை சிக்கலாக உள்ளது.” என்று பேசினார்.