ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி என்பது ஆசிய ஹாக்கி கூட்டமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச ஹாக்கி போட்டியாகும். இந்த போட்டியில் மொத்தம் ஆறு நாடுகள் பங்கேற்று போட்டியிட இருக்கின்றன. 

சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 போட்டி ஏழாவது பதிப்பாகும். வருகின்ற செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான ஆயுத்தப் போட்டியாக இந்த போட்டி பார்க்கப்படுகிறது. 

இதுவரை இந்திய அணி (2011, 2016, 2018) & பாகிஸ்தான் அணி (2012, 2013, 2018) ஆகிய அணிகள் தலா மூன்று முறை சாம்பியன்ஸ் பட்டங்களை வென்றுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் மழையால் இறுதிப் போட்டி கைவிடப்பட்டதால், இந்தியா & பாகிஸ்தான் ஆகிய இரண்டும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டன. 

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023ல் பங்கேற்கும் அணிகள் எவை?

1. இந்தியா

2. சீனா

3. பாகிஸ்தான்

4. ஜப்பான்

5. தென் கொரியா

6. மலேசியா

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 எங்கு நடைபெறுகிறது..? 

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டி இந்தியாவின் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 

அரையிறுதிக்கு தகுதிபெறும் முறை..? 

போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை ரவுண்ட் ராபின் முறையில் விளையாடும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். 

இதில் வெற்றி பெறும் அணிகள் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும். 

தமிழ்நாட்டில் கோப்பையை அறிமுகப்படுத்தியபோது..

இந்திய அணி விளையாடும் போட்டிக்கான அட்டவணை: 

தேதி நேரம் போட்டிகள்
ஆகஸ்ட் 3 8:30 இந்தியா vs சீனா
ஆகஸ்ட் 4 8:30 இந்தியா vs ஜப்பான்
ஆகஸ்ட் 6 8:30 மலேசியா vs இந்தியா
ஆகஸ்ட் 7 8:30 தென் கொரியா vs இந்தியா
ஆகஸ்ட் 9 8:30 இந்தியா vs பாகிஸ்தான்

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபி 2023 தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. கிட்டதட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி தொடர் நடத்தப்படுகிறது. 

கடைசியாக கடந்த 2007ம் ஆண்டு ஆடவர் ஆசியக் கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் சென்னையில் நடந்த கடைசி சர்வதேச ஹாக்கி போட்டியாகும்.