சென்னையில் நடைபெறும் 7வது ஆசியன் ஹாக்கி சாம்பியன் ஷிப்பில் பங்கேற்க பாகிஸ்தான் மற்றும் சீனா ஹாக்கி வீரர்கள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தனர்.
முன்னதாக மலேசியா, ஜப்பான் , கொரியா , இந்திய அணியை உள்ளிட்ட ஹாக்கி அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தபோது சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு பாகிஸ்தான் மற்றும் சீனா ஹாக்கி அணியினர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
பாகிஸ்தான் மற்றும் சீனா ஹாக்கி அணி வீரர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் ஹாக்கி சங்க நிர்வாகிகள் வரவேற்றனர். புவனேஸ்வரில் நடைபெற்ற 2018 ஹாக்கி உலகக் கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை.
பாகிஸ்தான் ஹாக்கி அணியின் கேப்டன் முஹம்மது உமர் பூட்டா பேசுகையில், “விளையாட்டு ஒரு நல்ல விஷயம். இதன்மூலம், மற்ற நாட்டு வீரர்களின் உங்கள் உறவை வளர்க்க உதவுகிறது. நிறைய விளையாட்டு போட்டிகள் இதுபோல் நடக்க வேண்டும்” என்றார்.
ஜப்பான், கொரியா, பாகிஸ்தான், சீனா மற்றும் மலேசியா ஆகிய ஐந்து அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. முதல் நான்கு இடங்கள் அரையிறுதிக்கு செல்லும் முன், ஆறு அணிகளும் தலா ஐந்து போட்டிகளை ரவுண்ட் ராபின் முறையில் விளையாடும்.
சீனாவுக்கு எதிரான தனது முதல் லீக் மூலம் இந்திய அணி களமிறங்குகிறது. ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது. அதேபோல், பாகிஸ்தான் அணி மலேசியாவுக்கு எதிராக ஆகஸ்ட் 3ம் தேதி தனது முதல் போட்டியில் களமிறங்கிறது.
முன்னதாக, இந்திய ஹாக்கி அணியினர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது நாட்டுபுற கலைகள் வைத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 முழு அட்டவணை:
- போட்டி 1: தென் கொரியா vs ஜப்பான், ஆகஸ்ட் 3, மாலை 4.00 மணி
- போட்டி 2: மலேசியா vs பாகிஸ்தான், ஆகஸ்ட் 3, மாலை 6.15
- போட்டி 3: இந்தியா vs சீனா, ஆகஸ்ட் 3, இரவு 8.30
- போட்டி 4: தென் கொரியா vs பாகிஸ்தான், ஆகஸ்ட் 4, மாலை 4.00 மணி
- போட்டி 5: சீனா vs மலேசியா, ஆகஸ்ட் 4, மாலை 6.15
- போட்டி 6: இந்தியா vs ஜப்பான், ஆகஸ்ட் 4, இரவு 8.30
- போட்டி 7: சீனா vs தென் கொரியா, ஆகஸ்ட் 6, மாலை 4.00 மணி
- போட்டி 8: பாகிஸ்தான் vs ஜப்பான், ஆகஸ்ட் 6, மாலை 6.15
- போட்டி 9: மலேசியா vs இந்தியா, ஆகஸ்ட் 6, இரவு 8.30
- போட்டி 10: ஜப்பான் vs மலேசியா, ஆகஸ்ட் 7, மாலை 4.00 மணி
- போட்டி 11: பாகிஸ்தான் vs சீனா, ஆகஸ்ட் 7, மாலை 6.15
- போட்டி 12: தென் கொரியா vs இந்தியா, ஆகஸ்ட் 7, இரவு 8.30
- போட்டி 13: ஜப்பான் vs சீனா, ஆகஸ்ட் 9, மாலை 4.00 மணி
- போட்டி 14: மலேசியா vs S கொரியா, ஆகஸ்ட் 9, மாலை 6.15
- போட்டி 15: இந்தியா vs பாகிஸ்தான், ஆகஸ்ட் 9, இரவு 8.30
- போட்டி 16: 5வது/6வது இடத்திற்கான போட்டி, ஆகஸ்ட் 11, மாலை 3.30 மணி
- போட்டி 17: அரையிறுதி 1, ஆகஸ்ட் 11, மாலை 6.00 மணி
- போட்டி 18: அரையிறுதி 2, ஆகஸ்ட் 11, இரவு 8.30
- போட்டி 19: 3வது/4வது இடத்திற்கான போட்டி, ஆகஸ்ட் 12, மாலை 6.00 மணி
- போட்டி 20: இறுதிப்போட்டி, ஆகஸ்ட் 12, இரவு 8:30