தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் அக்ஷயா மற்றும் திவ்யா இருவரும் இந்தியா சார்பாக  18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியா ரக்பி செவன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய அவர்கள் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினர்.


ஆசிய ரக்பி செவன்ஸ்:


இந்தியாவின் முன்னணி நிறுவனமான எச்.சி.எல். பவுண்டேஷன் கீழ் செயல்படும் ஃபார்சேஞ்ச் திட்டத்தின் கீழ் இவர்கள் பயிற்சி பெற்றவர்கள். தொடக்கத்தில் கோ - கோ பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த இவர்கள் இருவரையும், பயிற்சியாளர் குணசேகரன் குமார் ரக்பி பயிற்சி அளிக்கத் தொடங்கினார். 2021 மற்றும் நடப்பாண்டில் தேசிய அளவில்  நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றனர். அதில் சிறப்பாக ஆடியதால், இந்தியாவின் 27 முன்னணி ரக்பி விளையாட்டு வீரர்களில் ஒருவராக இடம்பிடித்தனர்.


தேசிய ரக்பி அணியில் இடம்பெற்றது ஈடு இணையில்லாத ஒரு சாதனையாக நான் கருதுகிறேன். விருது வழங்கும் விழாவில் நமது தேசிய கீதம் இசைக்கப்படுவதைக்கேட்ட  அந்தத் தருணம் அளவற்ற மகிழ்ச்சியை தந்தது. என்றைக்குமே என் மனதை விட்டு நீங்காத ஒன்றாகும்” என்று வீராங்கனை திவ்யா நெகிழ்ச்சியுடன் கூறினார்.


தமிழக வீராங்கனைகள்:


 ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்வதற்கு அக்ஷயா மற்றும் திவ்யா இருவரும் புவனேஸ்வர் KIIT பல்கலைக் கழகத்தில் 45 நாட்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். அந்தப் பயிற்சி அவர்களுக்கு தேசிய அணியில் இடம்பிடிக்க உதவிகரமாக அமைந்தது. ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப்பில் இந்தியா, மலேசியா, தாய்லாந்து, மலேசியா, சீனா, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் பங்கேற்றன. இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனைகள் அக்‌ஷயா, திவ்யாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 


மேலும் படிக்க: World Cup 2023: உலகக் கோப்பை 2023 அரையிறுதிக்கு செல்லுமா பாகிஸ்தான்? கைவசம் உள்ள வாய்ப்புகள் என்ன?


மேலும் படிக்க: Asian Para Games 2023: ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் புதிய வரலாறு! 100 பதக்கங்களை வென்று அசத்திய இந்தியா!