ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜோதி சுரேகா வென்னம் தலைமையிலான இந்திய வில்வித்தை வீரர்கள், ஹாங்காயில் நடந்து வரும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் 5ல் 4 தங்க பதக்கங்களை வென்றுள்ளது. 


ஹாங்காவில் நடந்து வரும் உலகக் கோப்பையின் முதல் கட்டப் போட்டியில், ஒலிம்பிக் அல்லாத வில்வித்தையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தங்க பதக்கங்களை குவித்து வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டு வில்வித்தை பிரிவில் ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு அணி பிரிவிலும், ஜோதி சுரேகா இந்தியாவிற்கான பெண்கள் கூட்டுப் பிரிவில் தனிநபர் பிரிவிலும் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. 


முதலாவதாக, ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த் ஸ்வாமி மற்றும் பர்னீத் ஆகியோர் அடங்கிய பெண்கள் கூட்டு வில்வித்தை அணி, இத்தாலியை 236-225 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவிற்கு முதல் தங்க பதக்கத்தை வென்றனர். 






மற்றொரு தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் அபிஷேக் வர்மா, பிரத்மேஷ் புகே மற்றும் பிரியான்ஷ் ஆகியோர் அடங்கிய ஆண்கள் அணி 238-231 என்ற புள்ளிக்கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி ஆண்கள் கூட்டு பிரிவில் இந்தியா தனது இரண்டாவது பதக்கத்தை வென்றது. 


தொடர்ச்சியாக, வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ் 1ல் அபிஷேக் வர்மா மற்றும் ஜோதி சுரேகா வென்னம் கூட்டு கலப்பு அணி எஸ்டோனியாவை 158-157 என்ற கணக்கில் தோற்கடித்து இந்தியாவிற்கு 3வது தங்க பதக்கத்தை வென்றது. 






அதனை தொடர்ந்து, ஜோதி சுரேகா வென்னம் பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். 


முன்னதாக, இந்திய மகளிர் ரிகர்வ் மூவரான தீபிகா குமாரி, அங்கிதா பகத் மற்றும் பஜன் கவுர் ஆகியோர் மெக்சிகோவிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்தனர். 


இன்று மூன்று முறை ஒலிம்பிக் தகுதிபெற்ற தீபிகா குமாரி, மகளிர் தனிநபர் ரிகர்வ் அரையிறுதிப் போட்டியில் பங்கேற்கிறார். மேலும், தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் மற்றும் தீரஜ் பொம்மதேவரா அடங்கிய இந்திய ஆடவர் ரிகர்வ் அணி தங்கப் பதக்கத்திற்காக கொரியா குடியரசை எதிர்கொள்கிறது.


உலகக் கோப்பை வில்வித்தை போட்டி: 


வில்வித்தை உலகக் கோப்பையின் முதல் கட்டப் போட்டி ஏப்ரல் 23 முதல் 28 வரை ஷங்காயில் நடைபெறும். தென் கொரியா மே 21 முதல் 26 வரை இரண்டாவது கட்டப் போட்டி நடைபெறுகிறது. 


உலகக் கோப்பையின் முதல் இரண்டு நிலைகளின் செயல்திறன் அடிப்படையில், மூன்றாவது கட்டத்திற்கான அணி, வருகின்ற ஜூன் 18 முதல் 23 வரை அண்டலியாவில் நடைபெறும் போட்டியில் தேர்வு செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நடைபெறும் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக ரிகர்வ் வில்வித்தை இறுதிப்போட்டி தகுதி நிகழ்வாக இருக்கும். 



  • ஆண்களுக்கான இந்திய அணி: பிரதமேஷ் புகே, அபிஷேக் வர்மா, ரஜத் சௌஹான், பிரியான்ஷ்

  • பெண்களுக்கான இந்திய அணி: ஜோதி சுரேகா வென்னம், அதிதி கோபிசந்த் ஸ்வாமி, பர்னீத் கவுர்

  • ஆடவர் ரீகர்வ்: தீரஜ் பொம்மதேவாரா, தருண் ஜவதேவாரா, மிருணாள் சௌஹான், தருண் ஜேஹவிரா

  • பெண்கள் ரீகர்வ்: தீபிகா குமாரி, பஜன் கவுர், அங்கிதா பகத், கோமாலிகா பாரி