உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தாவிற்கு எலக்ட்ரிக் காரை பரிசளிக்க உள்ளதாக மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். 


அஜர்பைஜானில் நடைபெற்ற உலக கோப்பை செஸ் போட்டியில் அனைவரையும் வீழ்த்தி இறுதி சுற்று தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா தேர்வாகி இருந்தார். வெற்றியை தீர்மானிக்கும் இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். உலக கோப்பையை கைப்பற்றும் போட்டியில் கடினமாகி விளையாடி மேக்னஸ் கார்ல்சனிற்கு நெருக்கடி கொடுத்த பிரக்ஞானந்தா அனைவராலும் கொண்டாடப்பட்டார்.






இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில் 3வதாக நடைபெற்ற டை பிரேக்கர் ஆட்டத்தில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி மேக்னஸ் கார்ல்சன் வெற்றிப்பெற்றார். 35 வயதான அனுபவமிக்க உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை 18 வயதான பிரக்ஞானந்தா எதிர்கொண்டு, அவரை திறணடிக்க வைத்தார். பிரக்ஞானந்தாவின் திறமையை குடியரசு தலைவர், பிரதமர் என அனைவரும் பாராட்டினர். 


இந்த நிலையில் பிரக்ஞானந்தாவின் கடைசி வரையிலான முயற்சிக்கு வாழ்த்து கூறிய மஹிந்திரா குழும தலைவரான ஆனந்த் மஹிந்திரா, பிரக்ஞானந்தாவை இந்த அளவுக்கு உருவாக்கிய அவரது பெற்றோருக்கு எக்ஸ்.யூ.வி. 400 என்ற எலக்ட்ரிக் காரை பரிசளிக்க உள்ளதாக டிவிட்டரில் அறித்துள்ளார். ஆனந்த் மஹிந்திராவின் இந்த முடிவுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். 





— Garry Kasparov (@Kasparov63) August 21, 2023