கரூரில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து இறுதிப் போட்டியில், ஆண்கள் பிரிவில் இந்தியன் நேவி அணியும் பெண்கள் பிரிவில் சவுத் வெஸ்டர்ன் ரயில்வே அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றது.
கரூர் மாவட்ட எல். ஆர்.ஜி நாயுடு. கூடைப்பந்து கழகம் சார்பில் 64ம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் கடந்த 22 ஆம் தேதி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. பெண்கள் பிரிவில் கரூர் வைசியா வங்கி சார்பில் 10 ஆம் ஆண்டாக நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் ஐ.சி.எப் சென்னை, சி.ஆர்.பி.எஸ் புது டெல்லி, இந்தியன் நேவி, லோனாவில்லா, இந்தியன் ஏர்போர்ஸ் புது டெல்லி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றனர்.
பெண்கள் பிரிவில் வடக்கு ரயில்வே, புது டெல்லி, மத்திய ரயில்வே மும்பை, மேற்கு ரயில்வே மும்பை, தெற்கு மேற்கு ரயில்வே ஹூப்ளி என 4 அணிகள் பங்கேற்று விளையாடின. ஆண்கள் பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் முதலில் விளையாடிய இந்தியன் நேவி லோனா வில்லா அணியும் இந்தியன் ஏர்போர்ஸ் நியூ டெல்லி அணியும் மோதியதில் 64க்கும் 55 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியன் நேவி லோனா வில்லா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
பெண்கள் இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் சவுத் வெஸ்டர்ன் ரயில்வே ஹூப்ளி அணியும் சென்ட்ரல் ரயில்வே மும்பை அணியும் மோதியதில் 61க்கு 53 என்ற புள்ளி கணக்கில்சவுத் வெஸ்டர்ன் ரயில்வே சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில் ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற அணிக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசும் சுழற் கோப்பையும் பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற அணிக்கு 75 ஆயிரம் ரூபாயும் சுழற் கோப்பையும் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.