DMK Meeting : அடுத்த பிரதமர் யார்? ஜுன் 1ம் தேதி திமுக ஆலோசனைக் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு


DMK Meeting :  நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜுன் 4ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஜுன் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. காணொலி வாயிலாக வரும் சனிக்கிழமை கால 11 மணியளவில் நடைபெற உள்ள கூட்டத்தில், திமுக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆகியோரும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சாவர்க்கர் பிறந்தநாள்.. ஆளுநர் ஆர்.என். ரவி மலர்தூவி மரியாதை, ட்விட்டரில் புகழாரம்..!


இன்று சாவர்க்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், ஆளுநர் மாளிகையின் ராஜ் பவன் எக்ஸ் பக்கத்தில் புகழாரமும் சூட்டப்பட்டுள்ளது. அதில், “பாரதத் தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.


Mettur Dam: மீண்டும் அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு எவ்வளவு கனஅடி அதிகரிப்பு?


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 575 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 390 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 1,432 கன அடியாக அதிகரித்துள்ளது.


Vairamuthu: நான் சர்ச்சைகளுக்கு பிறந்தவன் அல்ல.. செய்தியாளர்கள் சந்திப்பில் கடுப்பான வைரமுத்து!


நான் எந்தவொரு மேடையிலும் சர்ச்சையான கருத்தை உருவாக்க விரும்பவில்லை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். ஆதி ஆறுமுகம் இயக்கத்தில் வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு ஆகியோரோடு புதுமுகங்கள் நடித்துள்ள படம் “பனை”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து, வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா, இயக்குநர் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இசைத்தட்டை வெளியிட்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, “தயவு செய்து படங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள். பாமர மக்கள் தமிழை விரும்பும் நிலையில் சினிமாவுலகினர் அவர்களிடம் இருந்து தமிழை தள்ளி வைக்கிறார்கள்” என வருத்தம் தெரிவித்தார்.


அகில இந்திய ஹாக்கி போட்டி - டெல்லியை வீழ்த்தி கோவில்பட்டி அணி அசத்தல்


கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியில் டெல்லியை வீழ்த்தி கோவில்பட்டி அணி வெற்றி பெற்றது.


Crime: டிவி தொகுப்பாளினி பாலியல் வன்கொடுமை புகார்: அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது


சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பெண் தொகுப்பாளினி ஒருவர் கடந்த மே 13 ஆம் தேதி விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.


சென்னையில் பெண் தொகுப்பாளினியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியை போலீசார் கைது செய்தனர்.