புனேயில் நடைபெற்று வரும் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 


இதையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா 25, தவான் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதையடுத்து, ஜோடி சேர்ந்த கோலி - ராகுல் ஜோடி அணியின் வேகமாக உயர்த்தி வந்தனர். கேப்டன் கோலி 62 பந்துகளில் தனது 62 அரைசதத்தை பதிவு செய்து ரஷித்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது.




 


அதன்பிறகு, களமிறங்கிய தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இதனிடையே, ராகுல் அரை சதம் அடித்தார். பின்னர், இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். பன்ட் 28 பந்துகளில் அரைசதம் அடித்து மிரளவைத்த சிறிது நேரத்தில், ராகுல் தனது 5-வது சதத்தை பதிவு செய்தார். 108 ரன்னில் ராகுல், 77 ரன்னில் பன்ட் ஆட்டமிழக்க, கடைசியில் பாண்ட்யா சகோதரர்கள் பட்டையை கிளப்ப, 50 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. 


இங்கிலாந்து அணி தரப்பில் டோப்ஸி , டாம் குரான், தலா 2 விக்கெட்டுகள்,  சாம் குரான், ரஷித் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, 337 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது.