தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளது. தொடர்ந்து, சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதாலேயே, தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகமாகியுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், மையத்தைச் சேர்ந்த 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.