’ஆல் இங்கிலாந்து ஓபன்’ பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 16-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் 20-ம் தேதி முடிய உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர் லக்‌ஷ்யா சென், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தி இருக்கிறார். 

கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வீரர் ஒருவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். கடைசியாக் கோபிசந்த், இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். பிரகாஷ் நாத், பிரகாஷ் படுகோன், கோபிசந்திற்கு பிறகு ஆல் இங்கிலாந்து ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெருகிறார் லக்‌ஷயா சென்.

இன்று நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான மலேசியாவின் லீ ஜி சியாவை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 21-13, 12-21, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று லக்‌ஷயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண