10வது ஆசிய இன்டோர் தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கஜகஸ்தானில் பிப்ரவரி 10 முதல் 12 ம் தேதி வரை நடைபெறும் தொடரில் 6 தமிழக வீரர்கள் உள்பட 26 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது. 


6 தமிழர்கள்:


அதில், இலக்கியதாசன், சிவசுப்ரமணியன், ஜெஸ்வின் அல்ட்ரின், பிரவீன் சித்திரவேல் என்ற 4 தமிழக வீரர்களும், 
ரோசி மீனா பால்ராஜ், பவித்ரா வெங்கடேஷ் என்ற 2 தமிழக வீராங்கனைகளும் இந்திய தடகள அணியில் இடம் பெற்றுள்ளனர். 


பிப்ரவரி 10 முதல் 12 வரை கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெறும் 10வது ஆசிய இண்டோர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க 26 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய தடகள கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது. 






தடகளம்:


டோக்கியோ 2020 ஒலிம்பியன் தஜிந்தர்பால் சிங் தூர் மற்றும் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் பெண்களுக்கான தேசிய சாதனை வீராங்கனை ஜோதி யர்ராஜி உட்பட 13 ஆண் மற்றும் 13 பெண் விளையாட்டு வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளன. 


இதுகுறித்து பேசிய இந்திய தடகள கூட்டமைப்பு தலைவர் அடில்லே சுமரிவாலா, “ இந்த விளையாட்டு வீரர்களின் தேர்வு 36 வது தேசிய விளையாட்டு மற்றும் தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் 2022 இல் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் அமைந்தது, மேலும் இந்த நிகழ்வில் அவர்களின் வெற்றிக்கு நாங்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளோம்" என்று தெரிவித்தார். 


கடந்த முறை நடந்த இந்த தொடரில் இந்திய அணி 4 வெள்ளி, 2 வெண்கலம் உள்பட 6 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. 


இந்திய அணி முழு விவரம்: 


(ஆண்கள்): எலகியா தாசன் (60 மீ), அம்லன் போர்கோஹைன் (60 மீ), தேஜஸ் ஷிர்ஸ் (60 மீ தடை), சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்), அரோமல் டி (உயரம் தாண்டுதல்), சிவ சுப்ரமணியம் (கோலூன்றிப் பாய்தல்), பிரசாந்த் சிங் கனஹியா (கோலூன்றிப் பாய்தல்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), முகமது அனீஸ் யாஹியா (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்திரவேல் (மும்முறை தாண்டுதல்), அருண் ஏபி (மும்முறை தாண்டுதல்), தஜிந்தர்பால் சிங் டூர் (ஷாட் புட்), கரண்வீர் சிங் (ஷாட் புட்)


(பெண்கள்): ஜோதி யர்ராஜி (60 மீ & 60 மீ தடை ஓட்டம்), அர்ச்சனா சுசீந்திரன் (60 மீ), சப்னா குமாரி (60 மீ தடை ஓட்டம்), அபிநயா ஷெட்டி (உயரம் தாண்டுதல்), ரோசி மீனா பால்ராஜ் (கோலூன்றிப் பாய்தல்), பவித்ரா வெங்கடேஷ் (கோலூன்றிப் பாய்தல்), ஷைலி சிங் ( நீளம் தாண்டுதல்), நயனா ஜேம்ஸ் (நீளம் தாண்டுதல்), ஷீனா என்வி (டிரிபிள் ஜம்ப்), பூர்வா ஹிதேஷ் சாவந்த் (மும்முறை தாண்டுதல்), அபா கதுவா (ஷாட் புட்), ஸ்வப்னா பர்மன் (பென்டத்லான்), சௌமியா முருகன் (பென்டத்லான்)