Vinayagar Chaturthi 2025 Wishes in Tamil: இந்து மார்க்கத்தில் முழு முதற்கடவுளாக போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். இந்து மார்க்கத்தில் எந்தவொரு நல்ல காரியத்தையும் தொடங்கும் முன்பு விநாயகப் பெருமானை வணங்கி அந்த நாளைத் தொடங்குவதே பக்தர்களுக்கு வழக்கமான ஒன்றாகும்.
விநாயகர் சதுர்த்தி:
ஒவ்வொரு வருட ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி நாளாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். நடப்பாண்டில் ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, நாளை உலகெங்கும் வாழும் இந்துக்கள் விநாயகர் சதுர்த்தி நன்னாளை கொண்டாடுகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உங்களது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கீழே உள்ள வாழத்துகளை பகிருங்கள்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து:
ஐந்து கரத்தனைஆனை முகத்தனை..உன்னை வணங்கியே...துன்பம் மறந்தேன்...துன்பம் மறந்தே... இன்பம் அடைந்தேன்...
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனுக்கு அண்ணணே...சூழ்ச்சிகள் சூழாத வகையில்என்னை காப்பவனே...அனைத்திலும் முதன்மையாய் ஜொலிப்பவனே...தும்பிக்கையால் எங்களுக்குநம்பிக்கை தருபவனே...
ஆவணியில் உதித்தவனே..வளர்பிறை சதுர்த்தியில் பிறந்தவனே...உனை வணங்கினால் கவலைகளை கரைப்பவனே...மூஞ்செலியின் வாகனனே..பரந்த மனம் போல வயிறும் பெருத்தவனே..ஈசனின் மூத்த மகனே..பார்வதியின் பாச மைந்தனே...உனை போற்றி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம்..
தொந்தி கணபதியே...முழு முதற்கடவுளாய் முந்தி இருப்பவனே...உச்சி பிள்ளையாராய் உயர்ந்தவனே...பிள்ளையார்பட்டி பிள்ளையாய் வீட்டில் தவழ்பவனே..ஆலமரத்தடியிலும், அரசமரத்தடியிலும்அமைதி காப்பவனே...சுற்றி சுற்றி வரும் பக்தர்களைகாக்கும் சுப்பிரமணியனின் அண்ணனே...வளர்பிறையில் உதித்த முழு பிறையே...சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி நாயகனேஉனை போற்றி விநாயகர் சதுர்த்தியை வணங்குவோம்..
உச்சிப் பிள்ளையாராய் அமர்ந்து ஆட்சி செய்பவனே..கற்பக விநாயகனாய் பிள்ளையார்பட்டியில் காட்சி தருபவனே..புலியகுளத்தில் அழகாய் வீற்றீருப்பவனே...மணக்குள விநாயகராய் எங்கள் மனதை ஆள்பவனே...லிங்க வடிவில் தீவனூரில் இருந்து சங்கடங்கள் தீர்ப்பவனே...இஷ்டங்களை ஈடேற்றும் இடுக்குப் பிள்ளையாரே...சிதம்பரத்தின் நரமுக விநாயகனே...படித்துறையில் காட்சி தரும் பார்வதியின் தவப்புதல்வனே...உனை வணங்கி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம்..
அகிலத்தை ஆளும் ஏகதந்தனே...ஏகாம்பரேஸ்வரின் மைந்தன் ஏரம்பனே...வினைகள் தீர்க்கும் விநாயகனே...கவலைகள் போக்கும் கணநாதனே..உலகை ஆளும் ஒற்றைக் கொம்பனே...கயவர்களிடம் இருந்து காக்கும் கயமுகனே...மனதை வென்ற மயூரேசனே..ஆணவத்தை அழிக்கும் அங்குசபாசதரனே..செருக்கை ஒழிக்கும் ஹேரம்பனே... உனைப் போற்றி விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்..
வல்லமைகள் நிகழ்த்தும் வல்லவைமன்...அனைத்திற்கும் முன்னிற்கும் முன்னோனே...மாபெரும் சக்தியாக துணை நிற்கும் மகா வித்யா கணபதியே..சித்தி புத்தி பதியே..வலிகளை போக்கும் வரதனே...கொழுக்கட்டை விரும்பும் மோதகப் பிரியனே..பெருமாளின் மருமகனே..சங்கடங்களைத் தீர்க்கும் சங்கடஹர கணபதியே...விநாயகரைப் போற்றி வினைகளைத் தீர்த்திடுவோம்...
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்ட்டத்திற்கு தயாராகிவிட்டது. விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்காக சொந்த ஊர் செல்வதற்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம் ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் குடும்பத்தினருடன் தொடர்ந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர்.