Ganesh Chaturthi Pooja Leaves: இந்தியாவில் கொண்டாடப்படும் இந்துக்கள் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகை விநாயகர் சதுர்த்தி ஆகும். முழுமுதற்கடவுளாக போற்றப்படும் விநாயகர் அவதரித்த நாளாக ஆவணி வளர்பிறை சதுர்த்ததி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. வரும் 7ம் தேதியான சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
விநாயகர் சதுர்த்தி தினத்தில் நாம் ஏராளமான நன்மைகளைப் பெற வேண்டும் என்றால் 21 இலைகளை வைத்து வணங்கினால் நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கை ஆகும். அந்த இலைகள் என்னென்ன? அதனால் என்ன பலன் கிடைக்கும்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
21 இலைகள் என்னென்ன?
முல்லை இலை, கரிசலாங்கண்ணி இலை, வில்வ இலை, அருகம்புல், இலந்தை இலை, ஊமத்தை இலை, வன்னி இலை, நாயுருவி இலை, கண்டங்கத்திரி இலை, அரளி இலை, எருக்கம் இலை. மருத இலை, விஷ்ணுகிராந்தி இலை, மாதுளை இலை, தேவதாரு இலை, மரிக்கொழுந்து இலை, அரச இலை, ஜாதிமல்லி இலை, தாழம்பூ இலை, அகத்தி இலை, மஞ்சநெத்தி
என்னென்ன பயன்கள்?
- முல்லை இலை – வீட்டில் அறம் வளரும்
- கரிசலாங்கண்ணி - பொன், பொருள் வந்து சேரும்
- வில்வ இலை - மனதில் விரும்பி அனைத்தும் நடக்கும்
- அருகம்புல் - அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்
- இலந்தை - கல்வியில் பிள்ளைகளுக்கு மேன்மை உண்டாகும்
- ஊமத்தை - தாராள மனம் பெருகும்
- வன்னி இலை - இந்த ஜென்மத்திலும் சொர்க்கத்தில் மகிழ்ச்சி
- நாயுருவி - முகப்பொலிவு, உடல் அழகு அதிகரிக்கும்
- கண்டங்கத்திரி - மன வலிமை, வீரம் அதிகரிக்கும்
- அரளி - அனைத்து முயற்சிகளும் கைகூடும்
- எருக்கம் - கருவில் உள்ள குழந்தைக்கு பாதுகாப்பு
- மருதம் - மகப்பேறு செல்வம் உண்டாகும்
- விஷ்ணுகிராந்தி -நுண்ணறிவு அதிகரிக்கும்
- மாதுளை - பெரும் புகழும், நற்பெயரும் உண்டாகும்
- தேவதொரு இலை - எதையும் தாங்கும் மன வலிமை
- மரிக்கொழுந்து - இல்லற சுகம் அதிகரிக்கும்
- அரச இலை - உயர் பதவியும், வெற்றியும் உண்டாகும்
- ஜாதிமல்லி - சொந்த வீடு, மனை வாங்கும் பாக்கியம்
- தாழம்பூ - செல்வம் பெருகும்
- அகத்தி - கடன் தொல்லை நீங்கும்
மேலே கூறியவற்றை விநாயகர் சதுர்த்தி வழிபாட்டின்போது வைத்து வணங்கினால் ஏராளமான கஷ்டங்கள், துயரங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்பது ஐதீகம் ஆகும்.