கரூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.


 




விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலய வாசல் அருகே பிரத்யேக யாக குண்டங்கள் அமைத்து சிறப்பு யாகவியல்வி நடைபெற்றது. யாகத்திற்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு ஹோமம் நடைபெற்று சிறப்பு யாகம் அருகே வீற்றிருந்த கலசத்திற்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் கணபதிக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால் தயிர், பஞ்சாமிர்தம்,தேன், நெய் இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து வந்தனர். அனைத்து பக்தர்களுக்கும் மதிய அன்னதானம் நடைபெற்றது.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தான்தோன்றி மலை சிவசக்தி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் சிவசக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்.


 




 


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கருர் தான்தோன்றி மலை அருகே உள்ள சிவசக்தி நகரில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு என்னைக்காப்பு சாற்றி, பால் தயிர், பஞ்சாமிர்தம்,தேன், நெய் இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நிகழ்ச்சியின் ஏற்பாட்டை சிவசக்தி நகர் பொதுமக்கள் மற்றும் ஆலய தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து வந்தனர். அனைத்து பக்தர்களுக்கும் மதிய அன்னதானம் வழங்கப்பட்டது.