விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று திண்டுக்கல்லில் உள்ள ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லால் அமையப்பெற்ற 32 அடி உயர சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலைக்கு உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் 2000 தென்னங்கன்றுகள் மத்தியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
நாடெங்கும் இன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைக்கு பல்வேறு விதமான அலங்காரங்கள் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. பிள்ளையார்பட்டி போன்ற பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில்கள் உள்ள இடங்களில் இன்று அதிகாலை முதலே விநாயகர் சிலைகளுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக விநாயகர் சிலைக்கு பண மாலைகள், கொளுக்கட்டை மாலைகள், பூக்கள், காய்கறிகள் போன்றவைகள் மூலம் அலங்கரித்து வித்தியாசமான அலங்காரங்களுடன் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து திண்டுக்கல் கோபாலசமுத்திரம் கரையில் அமைந்துள்ள 108 நன்மை தரும் விநாயகர் கோயிலில் ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லிலான 32 அடி உயரத்தில் சங்கடஹர சதுர்த்தி விநாயகர் உள்ளார் இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சங்கடஹர சதுர்த்தி விநாயகர் பல வண்ண கலர்களால் விண்ணுொளியில் ஜொலி ஜொலித்தார். அதேபோல் வல்ல கணபதி, மகா கணபதி, சங்கடஹர சதுர்த்தி விநாயகர், வெள்ளை விநாயகர், என 108 ஒன்றையடி உயரத்தில் விநாயகர் சிலைகளும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நீண்ட வரிசையில் ஏராளமான பக்தர்கள் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.
இதேபோல் ஆலயத்தில் உள்ள 108 விநாயகருக்கும் பரிவார தெய்வங்களான காளகஸ்தீஸ்வரர், அம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு வண்ண வண்ண செடிகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தற்போது சங்கடகர சதுர்த்தி விநாயகர் மற்றும் 108 விநாயகரை வணங்கி வருகின்றனர்.