Vinayagar Chaturthi 2023: ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் ஐந்து முகத்தினை என்று பக்தர்களால் அன்போடும், பக்தியுடனும் வணங்கப்படும் விநாயகருக்கு உகந்த நாளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் கோலாகலமான பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி உள்ளது.


விநாயகர் சதுர்த்தி | Vinayagar Chaturthi 2023 Date:


தமிழ்நாட்டிலும் விநாயகர் சிலைகளை வீட்டிலும், மக்கள் கூடும் முக்கிய இடங்களில் வைத்து வழிபடுவார்கள். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை நாளில் வரும் சதுர்த்தியையே விநாயகர் சதுர்த்தியாக நாம் கொண்டாடி வருகிறோம். விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.


விநாயகர் சதுர்த்தியன்று அந்த நாளில் வரும் நல்ல நேரத்தில் விநாயகருக்கு பூஜை செய்வது சிறப்பு ஆகும். பங்குனி மாதத்தில் வரும் வளர்பிறை நாளில் விநாயகரை வணங்குவதை சைத்ர விநாயகர் சதுர்த்தி என கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் சைத்ர விநாயகர் சதுர்த்தி தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவதில்லை.


கோலாகல கொண்டாட்டம்:


தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பல ஆண்டுகளாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெருநகரங்களில்  முக்கிய இடங்களில் மிகவும் உயரமான வித்தியாசமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்படுகிறது.


வீடுகளில் களிமண்ணால் ஆன சிலைகளை வாங்கி பலரும் வணங்குவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். கிராமப்புறங்களில் சிறுவர்கள் அல்லது அந்தந்த பகுதி இளைஞர்கள் விநாயகர் செய்து வீதிகளில் உலா வருகின்றனர்.


ALSO READ | September 2023 Festivals: பக்தர்களே... விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, மிலாடி நபி.. செப்டம்பரில் இவ்வளவு பண்டிகையா..?


கோயில்களில் சிறப்பு வழிபாடு:


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் வீடுகளில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, சுண்டல்கடலை ஆகியவற்றுடன் இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல பலகாரங்களை செய்து அதை படையலிட்டு வணங்குவார்கள். மேலும், வீடுகளை நன்கு சுத்தம் செய்து வாழையிலை மற்றும் மாவிலை தோரணங்களால் அலங்கரிப்பதும் வழக்கம்.


தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் வைக்கப்படும் மிகப்பெரிய விநாயகர் சிலைகளை ஒரு வாரத்திற்கு பிறகு, கடல், ஆறு அல்லது மிகப்பெரிய நீர்நிலைகளை கரைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். சென்னையில் மெரினாவில் பெரும்பாலான விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவது வழக்கம்.


விநாயகர் சதுர்த்தியன்று பிள்ளையார்பட்டியில் உள்ள உலகப்புகழ்பெற்ற விநாயகர் கோயில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் உள்பட முக்கிய விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறும். இதனால், அன்றைய தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில்களில் குவிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Vinayagar Chaturthi 2023: பக்தர்களே.. வினைகள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி.. வீட்டு பூஜை வழிபாட்டு வழிமுறை எப்படி..?