விநாயகர் சதுர்த்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.


தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான விநாயகர் கோவில்கள் நேற்று முதல் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மிகவும் புகழ்பெற்ற திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட உள்ளது.




காலை முதல் உச்சிப்பிள்ளையார் கோவிலில் வழிபடுவதற்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் ஆலயமான மணக்குள விநாயகர் கோவிலில் காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி ஆலயத்திலும் பக்தர்கள் காலை முதல் குவிந்து வருகின்றனர். பிள்ளையார் பட்டி பகுதி முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களைகட்டி உள்ளது,


இதுமட்டுமின்றி, அனைத்து கோவில்களிலும் உள்ள விநாயகர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் காலை முதல் நடைபெற்று வருகிறது. சென்னையிலும் விநாயகர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதுடன் பல பகுதிகளில் விநாயகர் சிலைகள் பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கிராமப்புறங்களில் சிறுவர்கள் வீடுதோறும் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை சுமந்து கொண்டு விநாயகர் பாடலைப் பாடி உலா வந்து கொண்டிருக்கின்றனர்.




பெரும்பாலான ஆலயங்களில் இன்று மாலை விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்திக்காக ஆலயங்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே கோவில்களில் அலைமோதத் தொடங்கியுள்ளது. பிரசித்தி பெற்ற ஆலயங்களிலும் விநாயகர் சதுர்த்திக்காக சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.


இதுமட்டுமின்றி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடுகள் மற்றும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும் என்பதால் நேற்று முதல் காய்கறிகள், பழங்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.


மேலும் படிக்க : Vinayagar Chaturthi 2022 LIVE: மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு


மேலும் படிக்க : Vinayaga Chathurthi 2022 : இது விநாயக சதுர்த்தி Breakfast.. அவல் பண்டம்.. ரவை அப்பம்.. இது விக்கி ஃபேவரைட்ஸ்..