விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள கானையில் இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையிலும் 600 கிலோ அளவில் நவதானியங்களை கொண்டு 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்:
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, இன்று விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வட இந்தியாவிற்கு நிகராக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக கோயில்கள் களைகட்டி காணப்பட்டது. இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் அதிகாலை முதலே கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் தொடங்கிவிட்டது. குறிப்பாக, புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கோயில் திருவிழா கோலம் பூண்டுள்ளது.
600 கிலோ அளவில் நவதானியத்தில் விநாயகர் சிலை
விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காகித கூழ் விநாயகர் சிலைகள், பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடி வருகின்றனர். வீடுகளிலும் களிமண்ணாலான சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விழுப்புரம் அருகேயுள்ள கானையில் நவதானியங்களான கம்பு, கேழ்வரகு, பெரும்பயிரு, மொச்சை, துவரம்பருப்பு, பாதாம் மிளகு ,ஏலக்காய், மக்கா சோளம், கொண்டகடலை கொண்டு காகித கூழ் விநாயகர் சிலை மீது பத்து நாட்களாக ஒட்டி விநாயகர் சிலை செய்து கிராம மக்கள் இன்று வழிபாடு செய்கின்றனர்.
விவசாயம் செழிக்க நவதானிய 10 அடி உயர விநாயகர் சிலை
விவசாயம் செழிக்க கானையில் 600 கிலோ நவதானியங்களால் உருவாக்கப்பட்ட 10 அடி உயர விநாயகர் சிலை அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. இயற்கை சூழலை பாதிக்காத வகையில் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் நவதானியங்களை கொண்டு விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுவது அனைவரிடத்திலும் வரவேற்பினை பெற்றுள்ளது. ஐந்தாவது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி சிலை வழிப்பாடு செய்யப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி 2025 - பூஜை செய்ய சிறந்த நேரம் எது?
எப்போது , எப்படி கொண்டாட வேண்டும்..?
தேதி- 27 ஆகஸ்ட் 2025
பத்ர சுக்ல சதுர்த்தி தேதி தொடங்குகிறது - ஆகஸ்ட் 26 மதியம் 1:54 மணி
பத்ர சுக்ல சதுர்த்தி தேதி முடிவடைகிறது - ஆகஸ்ட் 27 பிற்பகல் 3:44 மணி சுக்ல யோகம் - ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 28 வரை மதியம் 12:35 முதல் மதியம் 01:18 வரை
பிரம்ம யோகம் - ஆகஸ்ட் 28 முதல் ஆகஸ்ட் 29 வரை மதியம் 01:18 முதல் 02:13 வரை
ராகுகாலம் - மதியம் 12:22 முதல் 01:59 வரை
நண்பகல் பூஜை நேரம் - ஆகஸ்ட் 27 காலை 11:05 மணி முதல் மதியம் 01:40 மணி வரை.
ஆகஸ்ட் 26ம் தேதி பகல் 02.22 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி பகல் 03.52 வரை சதுர்த்தி திதி உள்ளது. அதற்கு பிறகு பஞ்சமி திதி துவங்கி விடுகிறது....
ஆகஸ்ட் 27ம் தேதி காலை 11 மணி முதல் பகல் 01.40 வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை செய்யலாம். இதுவே விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கான சுப முகூர்த்த நேரமாக குறிப்பிடப்படுகிறது...
27ம் தேதி மாலையில் சதுர்த்தி திதி இருக்காது என்பதால் காலை முதல் பகல் வரையிலான நேரத்திற்குள் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை நிறைவு செய்து கொள்வது நல்லது.