விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள பூவரசன்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. கல் தூணில் நரசிம்மர் தோன்றி காட்சியளித்த இடத்தில் கிபி.7ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னரால் கட்டப்பட்ட சிறப்புடைய, தென் அஹோபிலம் என்று அழைக்கப்படும் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி லட்சுமி நரசிம்மருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் மேள, தாளம் மற்றும் மந்திரங்கள் முழுங்க பிரம்மோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. பின்னர் லட்சுமி நரசிம்மர் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 150 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ திருவிழா இன்று தொடங்கி வரும் 9ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வரும் 6ஆம் தேதியும், 7ஆம் தேதி திருமஞ்சனமும், 8ஆம் தேதி லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டமும் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்