உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலியில் முன்னோர்கள் கல்லறையை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

 

நவம்பர் இரண்டாம் தேதி இன்று கல்லறை திருநாள் அனுசரிப்பு

 

இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி கல்லறை தினமாக கிருஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லறைகளிலும் இறந்த முன்னோர்களுக்காக அவர்களது உறவினர்கள் கல்லறையை சுத்தம் செய்து மலர் தூவி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி இறந்த முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படைத்து அவர்களை நினைவு கூறுவர்.



 

அதன்படி கல்லறைத் திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி  பேராலயத்தில் சிறப்பு திருப்பலி இன்று நடைபெற்றது. இதில் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் முடிவுக்கு வரவும், போரில் மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. புனிதஆரோக்கிய மாதா பேராலயத்தில் அதிபர் இருதயராஜ் தலைமையில்  சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்டது. குருக்கள் துறவியர்கள், விசுவாசிகள், சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து ஆன்மாக்களுக்கும் தங்களுடைய உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.



 

அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில்  உள்ள  சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லறைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த கல்லறை திருநாளில் வெளிநாடு, வெளி மாவட்டங்கள், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் பங்கேற்றனர்.