நாகை மாவட்டம்  வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்தார். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நேற்று மாலை 6.30 மணியளவில் கொடியேற்துடன் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பல்லாயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணியில் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் மாதாவின் சப்பரங்களை இழுத்தபடி பாதயாத்திரையாக வந்தனர். பலநூறு கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக நடந்து வரும் இவர்களுக்கு  மதங்களை கடந்து இந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் என அனைவரும்  இவர்கள் இளைப்பாறுவதற்கு பந்தல்கள் அமைத்து குடிநீர் உணவு உள்ளிட்டவை வழங்கியது  மதங்களைக் கடந்து மனித நேயத்தை  எடுத்துக்காட்டுகிறது.



 

மாலை 05:45 மணியளவில் பேராலாயமுகப்பிலிருந்து திருக்கொடி ஊர்வலம் புறப்பட்டு கடற்கரை சாலை ஆறிய நாட்டு தெரு உள்ளிட்டமுக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கொடி மேடையை அடைந்தது. அங்கு தஞ்சை மறை மாவட்ட  ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் அவர்களால் திருகொடி புனிதம் செய்யப்பட்டு பின்னர் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியானது மெல்ல மெல்ல காற்றில் அசைந்து கொடி மர உச்சியை அடைந்ததும் பக்தர்களின் மரியே வாழ்க என சரண கோஷம் எழுப்பினர். வண்ண, வண்ண வானவேடிக்கைகள் மற்றும் அதிர்வேட்டுக்கள் முழங்க ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் ஒன்று சேர எரிவது கண்கொள்ளாக் காட்சியாக அங்கு இருந்தது.



 

விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் திருத்தேர் பவனி செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. 8ம் தேதி அன்னையின் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி முடிந்த பிறகு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந் தொற்று காரணமாக பக்தர்கள் பங்கேற்கின்றி பேராலய ஆண்டு திருவிழா நடைபெற்று வந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் வேளாங்கண்ணி முழுவதும் கட்டுக்கடங்கா கூட்டம் அலைமோதி வருகிறது.

 

இதனையொட்டி நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பேருந்துகளும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. மேலும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்காக தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகிய நான்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் மேலும் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பேராலயம், பேருந்து நிலையம், கடற்கரை மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பேராலயம் மற்றும் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணமும் முன்கூட்டியே தடுக்கவும் காவல்துறையினர் நடவடிக்கை வருகின்றனர் எடுத்து வருகின்றனர். இதே போல பக்தர்கள் அதிகம் ஆர்வத்தோடு கடலில் குளிப்பதை தடுக்க காவல்துறையினர் ஒளிபெருக்கி மூலமாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் அதேபோல தீயணைப்புத் துறையினர் கடலோர காவல் குழு போலீசார் தன்னார்வலர்கள் மீனவர்கள் என கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடங்கிய பேராலய ஆண்டு பெருவிழாவில் தஞ்சை சரக டிஐஜி  கயல்விழி நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.