இந்தியாவைப் பொறுத்த அளவில் வேப்பமரம் என்பது இந்து மக்களால் தாய்க்கு சமனாக பெண் தெய்வமாக  வணங்கப்பட்டு வருகிறது. இது ஒரு சர்வரோக நிவாரணியாக திகழ்வதால் ஆதி கால முதலே மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு மருத்துவ குணமிக்க மரமாக இருக்கிறது . ஆகவே இது மக்களால் மிகவும் போற்றி வணங்கப்படுகிற பொருளாக பாவிக்கப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு அதீத சக்தியையும் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டதாக இந்த வேப்பமரம் இருக்கிறது.


வேப்ப மரத்தின் அடி முதல் நுனி வரை  முழுவதும் உள்ள பாகங்கள் மருத்துவ ரீதியான குணமளிப்பதால், ஜோதிட ரீதியாக இது சக்திகளின் இருப்பிடமாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக தற்போது ஊர் பகுதிகளில் காண முடிகிறது, வேப்ப மரங்களை வீட்டின் முன்புறமும் பின்புறமும் நட்டு வைத்திருப்பார்கள் இதற்கு வாஸ்து ரீதியான குறிப்புகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது.


முக்கியமாக சனி தோஷம் மற்றும் பிற தோஷத்தை போக்க இந்த வேப்பமரம் உதவுவதாக வாஸ்து குறிப்புகளில் காணப்படுகிறது.


வேப்ப மரம் செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது என வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறது. ஆகவே தான் இந்தியாவை பொறுத்த அளவில் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வேப்ப மரத்துக்கு என தனியாக பூஜைகள் செய்து வழிபடும் வழக்கத்தை  கொண்டிருக்கிறார்கள்.


வீட்டு தோட்டத்தில் எப்போதுமே வேப்ப மரத்தை தெற்கு பகுதியில் தான் நட வேண்டுமென சொல்லப்படுகிறது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சூரிய உதயத்தின் போது வேப்பமரத்திற்கு நீர் பாய்ச்சினால் நல்ல பலன் கிடைக்கும் என ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. சனி தோஷத்தில் இருந்து நிவாரணம் பெற வேப்பிலையால் ஆன மாலையை அணிய வேண்டும் என வாஸ்து நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


பொதுவாக அனைத்து மத நூல்களிலும் மரங்கள் மற்றும் தாவரங்கள் உட்பட இயற்கையின் அனைத்து படைப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயற்கையின் செயல்பாடுக்கு அமையவே அனைத்தும் இயங்குகிறது‌.


அதுபோல தான் இந்த கசப்பு தன்மை வாய்ந்த வேப்ப மரமும் அதீத சக்தியையும் ,மருத்துவ குணமிக்க ஒரு சர்வரோக நிவாரணியாகவும் மக்களின் புழக்கத்தில் இருந்து வருகிறது.


இந்தியாவைப் பொறுத்தளவில் வேப்பமரம் ஒரு தெய்வீக சக்தியாகவும்,  மருத்துவ குணம் அளிக்கும் ஒரு மரமாகவும் பார்க்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி இந்த வேப்பமரம் சனி மற்றும் கேதுவுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது. வீட்டில் யாருக்கேனும் இந்த இரண்டு கிரக தோஷங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால், அங்கு வேப்ப மரத்தை நட்டு வணங்கி வந்தால் நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.


மேலும் வேப்பமர குச்சிகளால் ஹோமம் செய்வதன் மூலம் சனி பகவானின் கோபம் தணிந்து மனம்மகிழ்ந்து மக்களுக்கு விசேஷ நன்மைகளை வழங்குகிறார் என வாஸ்து சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


 அதேபோல் வேப்ப இலையை தண்ணீரில் கலந்து குளித்தால் கேது தொடர்பான தோஷங்கள் நீங்கும் நம்பப்படுகிறது.


 சனிபகவானின் அருளைப் பெறவும், பித்ரு தோஷத்தைப் போக்கவும் வேம்பை எப்படிப் பயன்படுத்துவது என தெரிந்து கொள்வோம்?


பித்ரு தோஷத்தை போக்கும் வேம்பு:


வேப்ப மரம் தெய்வீக சக்திகளின் வீடு என்று கூறப்படுகிறது.  இந்த வேப்ப மரத்தை வீட்டின் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் நடுவது மிகவும் சிறந்தது என குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்ட பகுதிகளில் வேப்ப மரத்தை நடுவதால் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என வாஸ்து குறிப்பு கூறுகிறது. அத்துடன் முன்னோர்களின் அருளும் கிடைத்து பித்ரு தோஷம் நீங்க பெறும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது. 


வேப்ப மர இலையால் செய்யப்பட்ட மாலையை அணியவும்:


வேப்ப இலை மாலையை அணிவதால் சனி தோஷம் நீங்கி, சனிபகவானின் அருள் கிடைக்கும் என கூறப்படுகிறது.  இவ்வாறு செய்வதன் மூலம் சனி தோஷத்தில் இருந்து விடுபடுவதுடன், சனியின் அசுப பலன்கள் நெருங்காது என ஜோதிட ரீதியாக குறிப்பிடப்படுகிறது.


ஞாயிற்றுக்கிழமை  வேப்ப மரத்திற்கு தண்ணீர் ஊற்றுங்கள்:


ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய உதயத்தின் போது வேப்ப மரத்திற்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பது மூலம் ஜாதகத்தில் அசுப பலன்களை தரும் கிரகங்கள் சாந்தி அடையும் எனக்  கூறப்படுகிறது.


வேப்ப மரத்தை எந்த திசையில் நட வேண்டும்?


ஜோதிடத்தில் வேப்ப மரம் செவ்வாய் கிரகத்தின் வடிவமாக கருதப்படுகிறது. ஆதலால் இந்த மரத்தை எப்போதும் வீட்டின் தெற்கு திசையில் நட வேண்டும் சொல்லப்படுகிறது.


வேப்பம் இலை, பழம் ,பட்டை, வேர், கம்பு, பூ ,அதன் காய்ந்த குச்சிகள் என அனைத்திலும் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இந்தியாவைப் பொறுத்த அளவை கோவில்களில் பேய் பிசாசுகளை ஓட்டுபவர்கள் மற்றும் , விஷக்கடிகளின் விஷத்தைப் போக்கும் மருத்துவர்களுக்கும் இந்த வேப்ப இலையை பயன்படுத்துவதைக் காண முடிகிறது. அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கும் சக்தி இந்த வேப்ப மரத்துக்கு இருப்பதால்தான் அது தெய்வீகப் பொருளாக என்றும் இந்திய மக்களால் பார்க்கப்படுகிறது.