கரூர் மாவட்டம் குளித்தலை காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அழகு குடத்தி, தீச்சட்டி ஏந்தி, பால்குடம் எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


 




 


கரூர் மாவட்டம் குளித்தலை பெரிய பாலத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதத்தில் 3 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 37வது ஆண்டாக காளியம்மன் கோவில் திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று  விரதம் இருந்த பக்தர்கள் குளித்தலை பெரிய பலம் காவிரி ஆற்றில் புனித நீராடி 1008 அலகு, தீச்சட்டி, பால்குடம் எடுத்து காவிரி ஆற்றில் இருந்து  முக்கிய வீதிகள் வழியாக வலம் பம்பை மேளங்கள் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.




 


மேலும் குழந்தை வரம் வேண்டி   வேண்டிய பக்தர்கள் தங்கள் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் ஊர்வலமாக கொண்டு வந்து நேர்த்தி கடந்து செலுத்தினார்.


 




 


அதனைத் தொடர்ந்து காளியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண