மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை ஊராட்சி கோழிகுத்தி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வானமுட்டி பெருமாள் கோயில் எனப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒரே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் வானமுட்டி பெருமாள் அருள்பாலிக்கிறார். கோடி ஹத்தி பாவ விமோசன தலம் என்பதே மருவி தற்போது கோழிகுத்தி என்று அழைக்கப்படுகிறது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வருகிற 9-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி எட்டு கால யாகசாலை பூஜைகள் நேற்று இரவு தொடங்கியது. நேற்று இரவு முதற்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதற்காக காவிரியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை ஹோமங்கள் தொடங்கியது. வெண்பட்டு வஸ்திரங்களுடன் பூரணாகுதி செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. எட்டுக்கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்ற பிறகு வருகின்ற 9ஆம் தேதி மகா ஸம்ரோக்ஷணம் என்று அழைக்கப்படும் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.
Vegetables Price List: விண்ணைமுட்டும் விலையில் தக்காளி.. இன்றைய காய்கறி விலை நிலவரம் இதுதான்..
தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலப் பெருவிழா! அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவன பயிற்சி வகுப்புகளில் 2 ஆண்டுகள் படித்து தேர்ச்சியடைந்த 170 மாணாக்கர்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் 'சைவசித்தாந்தப் புலவர்" என்ற பட்டத்தை வழங்கினார்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலப்பெருநாள் விழா சிற்றிலக்கிய திருநாள், காப்பியத் திருநாள், புராணத் திருநாள் என மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது. மூன்றாம் திருநாள் நேற்று நடைபெற்ற விழாவில் தருமபுரம் ஆதீனத்தின் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் வகுப்புகளில் சைவசித்தாந்த 2 ஆண்டுகள் பயின்று தேர்ச்சியடைந்த 170 மாணாக்கர்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 'சைவசித்தாந்தப் புலவர்" எனும் பட்டத்தை வழங்கிப் பேசினார்.
அவர்தம் அருளாசி உரையில், இறைவன் பிட்டுக்காக மண் சுமந்து வேலை செய்யாது பிரம்படி பட்டு திருவிளையாடல் நடத்திய ஆவணி மூலத்திருநாளைத்தான் உழைப்பாளர் தினமாக கொண்டாட வேண்டும். ஆனால், மே 1-ஆம் தேதியை உழைப்பாளர் தினமாக கொண்டாடுவதோடு, அன்றைய தினம் விடுமுறை அளிக்கின்றனர். நாடு கடந்தும் சைவ சித்தாந்தத்திற்கு மாநாடு நடத்தியது தருமபுரம் ஆதீனம் தான். திருமுறைகளைப் படித்தால் அனைத்தும் கைவரப் பெறும்.
மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை மதித்தால்தான் நாடு முன்னேறும். தவறான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை நெறிப்படுத்தி நல்வழியில் கொண்டு செல்வது ஆசிரியர்கள்தான். ஆசிரியர் தினவிழா நாளில் விருது பெறுகின்ற இந்நாளில் ஆசிரியர்கள் பணி தொய்வில்லாமல் நடைபெற வாழ்த்துகிறோம் என்றார். முன்னதாக தஞ்சாவூர் கோ.தெய்வநாயகத்திற்கு 'கட்டடக்கலை கலாநிதி" எனும் விருதை தருமபுரம் ஆதீனம் வழங்கினார்.