திருவண்ணாமலை (Tiruvannamalai News): தமிழ் மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலம் என்றும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலம் என்றும், தெற்கு நோக்கி நகரும் 6 மாத காலத்தினை தட்சிணாயன புண்ணிய காலம் என்றும், வடக்கு நோக்கி நகரும் 6 மாத காலத்தினை உத்தராயண புண்ணிய காலம் என்றும் அழைப்பார்கள். மகாபாரத கதையின்படி அம்பு படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர் மகரதமாதம் என்று அழைக்கப்படும். தைமாதம் பிறந்து தான் உயிர்நீத்தார் என்று கூறுகிறது. மேலும் தைமாதம் முதல் நாள் மகர மாதபிறப்பின் போதுதான் தமிழ்நாட்டில் தைபொங்கள் கொண்டாடபடுகிறது. சபரிமலையில் மகரஜோதியை பக்தர்கள் தரிசிக்கின்றனர். மேலும் இந்த காலத்தில் தான் சூரியன் உக்கிரம் ( வெயில் தாக்கம் ) தொடங்குகின்றது.

  


 






இந்தநிலையில் தான் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தட்சிணாயன புண்ணிய காலம், உத்தராயண புண்ணிய காலம், திருக்கார்த்திகை தீபம் ஆகிய 3 திருவிழாக்களுக்கு அண்ணாமலையார் சன்னதியில் உள்ள தங்கக்கொடி மரத்திலும், ஆடிப்பூரத்தில் உண்ணாமுலையம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்திலும் கொடியேற்று விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் வழிபாடுகளும் கோள்களின் சஞ்சாரங்களின்படி நடக்கிறது. இதன் அடிப்படையில் ஏராளமான தீர்த்தவாரிகள் நடைபெறும். தை மாதம் மட்டும் முதல்நாள் தாமரை குளத்தில் தீர்த்தவாரியும், பெளர்ணமி நாளில் ஈசானிய குளத்தில் தீர்த்தவரியும் , மேலும் ஒரு தீர்த்தவராக தை மாதம் 5ம் தேதி தென்பண்ணை ஆற்றிலும், அமாவாசை ஏழாவது நாள் ரத்தசப்தமியில் செய்யாற்றிலும் தீர்த்தவாரி நடைபெறும்.  சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலமான தை மாதத்தில் முதல் ஐந்து நாட்கள் புனித நதிகளான கங்கை , யமுனா ,சரஸ்வதி ,கோதாவரி ,நர்மதை போன்ற நதிகள் தட்சிண பினாகினி என்று சொல்லப்படும் தென்பண்ணை ஆற்றில்  கலப்பதாக ஐதீகம்.


 




 


ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் ஐந்தாவது நாள் அண்ணாமலையார் அம்பாளுடன் அண்ணாமலையார் கோவிலின்  தெற்கு திசையில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை வழியாக ஓடும் தென்பண்ணை ஆற்றில் தீர்த்தவாரியில் கலந்து கொள்வார். அப்போது அப்பகுதியில் உள்ள கோவில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளுடன் செல்வார். பகல் 12 மணிக்குமேல் ஆற்றில் தீர்த்தவாரி நடக்கும். அதன்படி சோபகிருத்து ஆண்டான இந்த ஆண்டு 19 தேதி (தை 5 தேதி) நாளை  வெள்ளிக்கிழமை அதிகாலையில்   அண்ணாமலையார் மணலூர்பேட்டைக்கு செல்வார். ஆற்றுதிருவிழாவில் திருவண்ணாமலை , கள்ளக்குறிச்சி ,கடலூர் ,  மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீர்த்தவரியை தொடர்ந்து புனிதநீராடுவார்கள் தீர்த்தவாரி முடிந்த மறுநாள் அண்ணாமலையார் கோவிலுக்கு திரும்புவார். இந்த இரண்டு நாடுகளும் வழி நெடுங்களிலும் அண்ணாமலையாரை பக்தர்கள் வழிபடுவார்கள். மேலும் இதற்க்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 


மேலும் படிக்க;Thaipusam 2024: வெற்றியைத் தரும் தைப்பூசம்! விரதம் இருந்து வழிபட்டால் 12 ராசிக்கும் என்ன பலன்கள்?