Karthigai Deepam 2023 Date and Time: தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதங்களில் ஒன்று கார்த்திகை மாதம் ஆகும். கடந்த அக்டோபர் 29-ந் தேதி கார்த்திகை மாதம் பிறந்தது. கார்த்திகை மாதம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் ஆகும்.

Continues below advertisement

உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலை திருக்கோயில் உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான கோயில்களிலும் ஜோதி ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்படும். அதேபோல, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வீடுகளிலும் தீபங்கள் ஏற்றி வீடுகளை ஜோதிகளால் ஒளிரவிடுவது வழக்கம் ஆகும்.

கார்த்திகை தீபம் எப்போது? | When is Karthigai Deepam 2023

நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபம் வரும் 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தினத்தில் வரும் இந்த கார்த்திகை தீப திருநாளில் மக்கள் அன்றைய தினம் மாலை வேளையில் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுவார்கள்.

Continues below advertisement

திருவண்ணாமலை பரணி தீபம், மகாதீபம்:

மகா கார்த்திகை தீபம் என்றாலே திருவண்ணாமலையில் பக்தர்கள் கோடிக்கணக்கில் குவிவது வழக்கம் ஆகும். அன்றைய தினம் திருவண்ணாமலையே பக்தர்கள் கடலாக காட்சி தரும். திருவண்ணாமலையில் பொதுவாக மாலை 5.30 மேல் பஞ்சமூர்த்திகளின் தரிசனம் நடைபெறும்.

முதலில் விநாயகர், முருகனுக்கு தீபாராதனை நடைபெறும். அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் வர கடைசியாக அர்த்தநாரீஸ்வரரர் சொரூபமாக ஆனந்த தாண்டவமாடிய காட்சி தருவார். கோவிலில் இருந்து வெளியே வந்த அடுத்த நிமிடமே மீண்டும் உள்ளே சென்று விடுவார் அர்த்தநாரீஸ்வரர். அவரின் தரிசனம் கண்ட பிறகு கொடி அசைக்கப்படும்.

திருவண்ணாமலையில் மாலையில் ஏற்றப்படும் மகாதீபத்திற்கு முன்னதாக, அதிகாலையிலே பரணி தீபம் ஏற்றப்படும். பரணிதீபமானது கோயிலின் உள்ளே ஏற்றப்படும் தீபம் ஆகும். இந்த தீபமானது அண்ணாமலையார் கோயிலில் அதிகாலையிலே ஏற்றப்படும்.

விளக்குகள்:

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு நவக்கிரகங்கள் 9, ராசிபலன்கள் 12, நட்சத்திரங்கள் 27 என்ற கணக்கில் வீடுகளில் விளக்குகள் ஏற்ற வேண்டும். கார்த்திகை தீபத் திருநாளில் வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் சகல நன்மைகளும் கிட்டும் என்பது ஐதீகம் ஆகும். கார்த்திகை தீப திருநாளில் தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்கள் மற்றும் முருகனின் கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Sani Vakra Nivarthi Palangal: சனி வக்கிர நிவர்த்தி! மேஷம், ரிஷபம், மிதுன ராசிக்கார்களுக்கு இனிமே அதிர்ஷ்டம்தான்!

மேலும் படிக்க: Kuthu Vilakku: நன்மை தரும் கார்த்திகை தீபம்! வாசலில் ஏற்றப்படும் குத்துவிளக்கின் அம்சங்கள் இத்தனையா?