அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,

   


9 கிரகங்களில் சனி தான் நீதிபதி, அதனாலோ என்னவோ நீதிமன்றங்களில் கருப்பு உடை அணிந்து வழக்கறிஞர்கள் வாதாடுகின்றனர். திட்டும் போது சனியனே என்று திட்டுவது உண்டு, சனி போன்று மந்தமாக செயல்படக்கூடாது என்பதற்காக அவ்வாறு சொல்வது உண்டு. சனி என்றாலே ஜோதிடத்தில் மந்தன் என்று கூறுவார்கள். பொறுமையாக நகரக் கூடிய கிரகம் என்பதால் அந்தச் சொல் பயன்படுத்தப்படும். 


சனி வக்கிர நிவர்த்தி(Sani Vakra Nivarthi):


ஆனால், சனி ஒரு ஜாதகனின் கட்டத்தில் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருந்து விட்டால், அவர் மிகுந்த சுறுசுறுப்பு உடையவராக இருப்பார். பெரிய, பெரிய பதவிகளில் அமர்வார். உதாரணத்துக்கு கலைஞர் கருணாநிதி, மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களின் ஜாதகங்களில் ”சனி-உச்சம்” அடைந்து இருப்பார்.  ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்ற, இறக்கங்களை அசால்டாக கொடுத்துச் செல்வது சனியின் பாலிசி. 


அந்த வகையில்  ஜூன் 17, 2023 அன்று  கும்ப ராசியில் வக்கிரம் பெற்ற சனி பகவான், தற்போது நவம்பர் 4-ஆம் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார். வக்கிர நிவர்த்தி அடையும் சனி  பகவான், எந்தெந்த ராசிக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்கலாம்?


மேஷ ராசி :  95%  வெற்றி உறுதி 


அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே, 


இது நாள் வரையில் உங்களுடைய ராசிக்கு 11ம் வீடான கும்பத்தில் சனி பகவான் வக்ரகதியில் இருந்திருக்கிறார்.  ஏற்ற, இறக்கமான பலன்களை சந்தித்து வந்த நீங்கள், தற்போது மிகப்பெரிய உயரத்தை தொடப் போகிறீர்கள். குறிப்பாக தொழிலில், புதிய வேலைவாய்ப்பில், புது முயற்சியில்,  ஏற்றமான பலன்களை அடையப் போகிறீர்கள். மேஷ ராசிக்கு சனிபகவான் 10,  11 ஆம் வீட்டிற்கு அதிபதி  லாபஸ்தானத்தில் வக்கிரம் பெற்று நவம்பர் 4ம் தேதி வக்ர நிவர்த்தி அடைவதால், தொட்ட காரியங்கள் துலங்கும்,  கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்,  பணவரவு தாராளமாக இருக்கும்,  குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும்,  பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று கூடுவீர்கள். 


வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும்,  வீடு மனை வாங்கி மகிழ்வீர்கள்,  திருமணம் கைகூடும்,  குழந்தை பேறு கிடைக்கும்.  அரசியல்வாதிகளுக்கு ஏற்றமான காலகட்டம்.  பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். அனைத்து வளங்களையும் லாபாதிபதி சனிபகவான் உங்களுக்கு வழங்க போகிறார். ஏற்கனவே மேஷ ராசியில் லக்னத்தில் ராகு அமர்ந்து  கணவன் மனைவி பிரிந்த நிலையில்,  தற்போது இரண்டாம் திருமணத்திற்கான வாய்ப்புகள் கைகூடி வரப்போகிறது.  ஒரு வேலையை முடிப்பதற்காக அலைந்து திரிந்த நீங்கள்,  தற்போது அமர்ந்த இடத்திலிருந்து அந்த வேலையை சுலபமாக முடிக்க போகிறீர்கள். அடுத்து வரக்கூடிய காலகட்டம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதிலும் வெற்றி வெற்றி !!!


 உங்களுடைய அதிர்ஷ்டமான எண் :  5,9


 உங்களுடைய அதிர்ஷ்டமான நிறம் : சிவப்பு  


 தெய்வம் :  சனி பகவான் வழிபாடு


ரிஷப ராசி : 90%  வெற்றி உறுதி 


அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே,  


உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான கும்பத்தில் சனி பகவான் வக்கிரம் பெற்றிருந்தார். தற்போது நவம்பர் 4-ஆம் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார். சனியின் வக்கிர நிவர்த்தி உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொண்டு வரப் போகிறது,  தேங்கி கிடந்த காரியங்கள் வெற்றியாக நடைபெறப்போகிறது.  தொழிலில் முன்னேற்றத்தை காணப் போகிறீர்கள். 


இதுநாள் வரையில் ரிஷப ராசிக்கு 12-ஆம் இடத்தில் மிகப் பெரிய இரண்டு கிரகங்கள் ஆக்கிரமித்து உங்களுக்கு செலவுகளையும் அலைச்சல்களையும் ஏற்படுத்தி வந்திருக்கிறது.  டிசம்பர் 30-ஆம் தேதி வரை குரு வக்கிரத்தில் உங்களுடைய ராசிக்கு லாபத்தில் செல்கிறார்.  இது பிரம்மாண்டமான ஏற்றமான காலகட்டம். அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற்ற ”ராகு, கேது”  பெயர்ச்சியும் உங்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இத்தனை சாதகங்களுக்கு மத்தியில் சனி வக்கிர நிவர்த்தியும், உங்கள் ராசிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.  


தொழில் முன்னேற்றம், பணவரவு அதிகரிக்கும் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த காரியங்கள் நடைபெறும்.  வேலையில்  இரட்டிப்பு லாபம்,  பதவி உயர்வு, வர்த்தகப் பிரிவில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.  ரிஷப ராசி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு 3 மடங்கு லாபம் பெருகப் போகிறது.  சேமிப்பு உயரும் தொட்டது வெற்றியடையும் வாழ்த்துகள்!!!


அதிர்ஷ்டமான எண் : 5, 1


அதிர்ஷ்டமான நிறம் :  வெள்ளை


வணங்க வேண்டிய தெய்வம் :   மகாலட்சுமி 


மிதுன ராசி :    90% வெற்றி உறுதி 


இது நாள் வரைக்கும் உங்கள் ராசிக்கு 9-ஆம் இடத்தில் அமர்ந்து  வக்கிரம் பெற்று, தற்போது வக்கிர நிவர்த்தி அடையும் சனி பகவானால், உங்களுக்கு  யோகமான காலகட்டம் ஆரம்பமாகி உள்ளது. கிட்டத்தட்ட அஷ்டம சனியின் தாக்கம் போன்றே உங்கள் வாழ்க்கையில் பல சிக்கல்களை அதிகமாக சந்தித்திருப்பீர்கள். அஷ்டம சனியின் தாக்கம் குறைந்து நவம்பர் 4-க்கு பிறகு நிலையான வாழ்க்கை அமையும். திருப்திகரமான வரவு, செல்வம் செல்வாக்கு, பதவி உயர்வு, தடைகள் விலகுதல், நினைத்த காரியத்தில் வெற்றி, மிதுன ராசிக்கு 8-ம் பாவத்திற்கும் 9-ஆம் பாவத்திற்கும் அதிபதி 9-ஆம் பாவத்திலேயே ஆட்சி பெறுவதால், அது பாக்கிய வீடாகவும் இருப்பதால், ஜாதகர் விரும்புகின்ற அனைத்தும் அவரது கைகளிலேயே வந்து சேரும்.


10-ஆம் இடத்தில் ராகு பிரவேசித்திருப்பதால் வேலையில் அலைச்சல் உள்ளது போல தோன்றும். ஒன்று இரண்டு மாதத்திற்குள் அதுவும் சரியாகிவிடும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு குருபகவான் வக்ர நிவர்த்தி அடைந்து மேஷ ராசியில் நேர்கதியில் பயணிப்பதால் அது உங்களுக்கு லாப வீடாக உள்ளது. ஒன்பதாம் பாவத்தில் சனி 11-ஆம் பாவத்தில் குரு இதைவிட வேறொரு சிறப்பான கிரக நிலைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆகவே இந்த காலகட்டத்தை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


அதாவது 2024 ஜனவரி முதல்  மே மாதம் 1-ஆம் தேதி வரையில்  மிகச் சிறப்பான கிரக சூழ்நிலைகள் இருப்பதால், வீடு, மனை வாங்கலாம் புது வீட்டிற்கு குடி போகலாம்,  பிள்ளைக்கு வரன் தேடலாம்,  திருமண காரியத்தை செய்து முடிக்கலாம்,  வண்டி வாகனம் வாங்கலாம்,  ஒரு வேளைக்கு இரண்டு வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம், மனம் தெளிவாக இருக்கும்,  சிந்தனை ஆற்றல் பெருகும்.  என்னடா இது வாழ்க்கை என்று புலம்பியவர்கள் இதுதாண்டா வாழ்க்கை என்று மகிழ போகிறீர்கள்.


சனி வக்கிர நிவர்த்தியால் முன்னேற்றம் அடையப் போகிற ராசிகளில் உங்கள் ராசி தான் டாப் ராசி. அதேபோல வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை, சிறு உடல் உபாதைகள் வந்து செல்லும்,  ஒற்றை தலைவலி,  மூட்டு வலி,  கை கால் குடைச்சல்,  முதுகுத்தண்டு பிரச்சனை, போன்றவை வரலாம். கவலை வேண்டாம் மருத்துவரை அணுகினால் உடனடியாக சரியாகிவிடும். மொத்தமாக சனி வக்கிர நிவர்த்தியின் பலன்கள்  அதிகப்படியாக அனுபவிக்கப் போகின்ற ராசியில்  உங்கள் ராசி தான் No.1  வெற்றி நிச்சயம்  வாழ்த்துகள் !!!


அதிர்ஷ்டமான எண் :  5


அதிர்ஷ்டமான நிறம் :  பச்சை 


வணங்க வேண்டிய தெய்வம் : பெருமாள்