திருப்பதி தேவஸ்தானத்திற்கு காணிக்கை முடி ஏலத்தின் மூலம் சுமார் ரூ.105 கோடி வருமான கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பதியில் பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பித்த தலைமுடியில் 2 லட்சத்து 900 கிலோ  ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 105 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.


பலரும் வேண்டுதல்களுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்கின்றனர். அப்படி, திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை அவற்றின் நீளத்திற்கு ஏற்ப தரம் பிரித்து பாதுகாத்து வரும் தேவஸ்தான நிர்வாகம், இதை ஆன்லைன் மூலம் சர்வதேச அளவில் ஏலம் நடத்தி விற்பனை செய்கிறது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை தலைமுடி ஏலம் நடத்தப்படுகிறது.  அப்படி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் 2 லட்சத்து 9 ஆயிரம் கிலோ எடையிலான தலை முடி ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. ரூ.105 கோடி வருமான கிடைத்துள்ளது.


திருப்பதி கோயில் 


உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். பாதயாத்திரை, இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்காகவும், லட்டு வழங்கும் மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது பலரது நம்பிக்கையாக இருந்து வருகிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வந்தால் வாழ்க்கையில் திருப்பம் எற்படும் என்பதற்காக கோயிலுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதி என்றதும் ஏழுமலையான் நினைவோடு அங்கு பிரசாதாமக வழங்கப்படும் ‘லட்டு’ சேர்ந்துகொள்வதை தவிர்க்க முடியாது. திருப்பதி லட்டு என்றால் அவ்வளவு பிரபலம்.


லட்டின் தனித்துவ சுவைக்கு அடிமையாகாதோர் இல்லை என்றே சொல்லலாம். அதுவும் தரிசனத்திற்கு சென்று திரும்புவர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது; கூடுதல் லட்டு வேண்டுமானால் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது