ஆவணி தேரோட்டம்- உள்வாங்கிய கடல்
 
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளியம்மன் தனித்தனி சப்பரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது.  
9ம் திருவிழாவான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதனைதொடர்ந்து தீபாராதனை நடந்தது. மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடந்தது.




பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்


பகலில் சிவன் கோயிலிருந்து சுவாமி குமரவிடங்கபெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து திருநெல்வேலி ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தைச் சேர்ந்தார். அங்கு திருக்கண் சாத்திய பின் மீண்டும் காமராஜர் சாலை, உள்மாட வீதி வழியாக சிவன் கோயில் சேர்ந்தனர். இரவு சன்னதி தெருவில் உள்ள பூச்சிக்காடு அருணாசலத்தேவர் வகையறா மண்டபத்திலிருந்து சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி தேர் கடாட்சம் அருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஞாயிறு விடுமுறை தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடல் மற்றும் நாழிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


- முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமின்! ஆனால் நிபந்தனை! - நீதிபதி கறார்


தேரோட்டம்


ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 6:30 மணிக்கு நடைபெற்றது. இதில் முதலில் விநாயகரும் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேரும், அடுத்ததாக வள்ளியம்மன் தேரைரும் பக்தர்கள் வடம் பிடித்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷங்கள் முழங்க  இழுத்தனர். இரவு சுவாமி, அம்மன் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா வந்து சிவன் கோயில் சேர்கின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் சுமார் 30 அடி தூரம் வரை கடல் உள்வாங்கியது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Paris Paralympics 2024:பாரீஸ் பாராலிம்பிக்..பதக்க வேட்டையை தொடருமா இந்தியா! இன்றைய போட்டி அட்டவணை


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Vande Bharat Fare: தென் மாவட்டங்களுக்கு 2 வந்தே பாரத் ரயில் சேவை - டிக்கெட் விலை எவ்வளவு?